சட்டை பட்டனை கழட்டி.. கையை தூக்கி.. ரஜினியின் ரீல் மருமகளில் கிளுகிளு போஸ்!
சென்னை: 'ஜெயிலர்' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகை மிர்னா மேனன். அந்த படத்தில் அவர் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து இருந்தாலும், அந்த கதாபாத்திரம் அவருக்கு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. தற்போது, அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.
மிர்னா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான 'புர்கா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் நடித்த மெகா ஹிட் திரைப்படமான 'ஜெயிலர்' படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். அந்த படத்தில் அவருக்கு இரண்டு, மூன்று காட்சிகள் மட்டுமே இருந்தாலும், அவரது நடிப்பு ரசிகர்களிடமும், சினிமா வட்டாரத்திலும் பேசப்பட்டு வந்தது.
நடிகை மிர்னா மேனன்: 'ஜெயிலர்' திரைப்படம் பெற்ற அபார வெற்றியே மிர்னா மேனனின் சினிமா பயணத்தை வேகப்படுத்தியது. அந்த படத்திற்கு பிறகு, அவருக்கு தமிழில் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது அவர் பிஸியான நடிகையாக மாறியுள்ள நிலையில், 'ஜெயிலர் 2' திரைப்படத்திலும் நடித்துவருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கவர்ச்சி போட்டோ: திரைப்படங்களைத் தவிர, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை மிர்னா மேனன், அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த புகைப்படங்களில், சட்டை பட்டனை கழற்றிவிட்டு, படு கிளாமராக போஸ் கொடுத்துள்ள மிர்னா, ரசிகர்களின் கவனத்தை ஒரே நேரத்தில் ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவரா இப்படி?" என்று ஆச்சரியத்துடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மிர்னா மேனனின் இந்த கிளாமர் போட்டோஷூட் தற்போது சமூக வலைதளங்களில் படுவைரலாகி, கவனம் பெறும் நடிகையாக மிர்னா மேனன் உருவெடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











