Actress Mirnaa: காற்றில் அலைமோதும் கூந்தலுடன் க்யூட் போஸ்... மிர்ணாவின் கலக்கல் போட்டோஸ்!
சென்னை: நடிகை மிர்ணா கடந்த 2015ம் ஆண்டில் தாதுபுத்திரி என்ற தொடர் மூலம் தன்னுடைய அறிமுகத்தை செய்தவர்.
தொடர்ந்து தமிழில் பட்டதாரி என்ற படம் மூலம் நாயகியாக இன்ட்ரோ கொடுத்தார். இந்தப் படம் கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார் மிர்ணா.

நடிகை மிர்ணா: நடிகை மிர்ணா தாதுபுத்திரி என்ற தொடர்மூலம் அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார் மிர்ணா. அதிதி மேனனாக திரையுலக பயணத்தை தொடங்கிய மிர்ணா, கடந்த கடந்த 2016ம் ஆண்டில் வெளியான பட்டதாரி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து நெடுநெல்வடை என்ற படமும் இவருக்கு சிறப்பாக அமைந்தது.
ரஜினியின் மருமகள்: தமிழில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் மிர்ணா. இவருக்கு படத்தில் வசனங்கள் அதிகமாக இல்லாத நிலையில், சில நிமிடங்களே படத்தில் வந்தாலும் இந்த கேரக்டர் கவனம் பெற்றது. அதிகமான வரவேற்பையும் ரசிகர்களிடையே பெற்றுத் தந்தது. முன்னதாக தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியான பிக் பிரதர், கிரேஸி ஃபெலோ மற்றும் உக்ரம் போன்ற படங்களும் இவருக்கு சிறப்பாக அமைந்தன.

தமிழ், தெலுங்கில் முன்னிலை: இவர் மலையாளியாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு மொழிப் படங்கள் இவருக்கு அதிகமாக கைக்கொடுத்து வருகின்றன. ஐடியில் பணிபுரிந்துவந்த மிர்ணா, நடிப்பின்மீது இருந்த ஆர்வம் காரணமாக தன்னுடைய வேலையை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். முன்னதாக ரியாலிட்டி ஷோ ஒன்றின்மூலம் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார். தற்போது ஜெயிலர் படத்தின் சக்சஸை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவருகிறார் மிர்ணா.
சமூக வலைதளங்களில் பிசி: சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார் மிர்ணா. இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இன்ஸ்டாகிராமில் மிர்ணாவை 12 லட்சம் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். அடுத்தடுத்த புகைப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களை வெளியிட்டு தொடர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

புடவையில் கியூட் போட்டோஷுட்: தற்போது புடவையில் சிறப்பான போட்டோஷுட்டை எடுத்து அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியான சில மணிநேரங்களிலேயே ஏராளமான ரசிகர்களின் லைக்ஸ்களை பெற்றுள்ளன. காற்றில் கூந்தல் அசைந்தாடும்வகையில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கொச்சியில் பிரபல ஹோட்டலில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மிர்ணா பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











