Mirnaa: முந்தானையை தோளில் போடாமல் ரசிகர்களை சொக்க வைத்த மிர்னா.. சின்னப்புள்ள தனமால்ல இருக்கு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து அதிகமான வசூலையும் குவித்தது. இந்த படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக வசந்த் ரவியின் மனைவியாக நடித்து கவனத்தை ஈர்த்திருந்தார் மிர்னா. தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் மிர்னா.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் மிர்னா, தொடர்ந்து போட்டோ சூட் புகைப்படங்கள், வீடியோக்கள், வொர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவரை 13 லட்சம் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். தற்போது கருப்பு நிற ஸீ-த்ரு புடவையில் மிர்னா வெளியிட்டுள்ள வீடியோ ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Instagram tamil cinema

நடிகை மிர்னா மேனன்: கடந்த ஆண்டில் வெளியான நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் அவரது மருமகளாக வசந்த் ரவியின் மனைவியாக நடித்து கவனத்தை பெற்றுள்ளார் மிர்னா மேனன். இந்த படம் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே அறிமுகம் கிடைத்துள்ளது. தாதுபுத்திரி என்ற தொடரில் முதலில் தோன்றிய மிர்னா ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டில் தமிழில் வெளியான நெடுநல்வாடை படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் நடித்த போது அதிரா சந்தோஷ் என்று என்ற பெயரில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படத்தில் மிர்னா: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் மிர்னா மேனன் கடந்த 2016ல் வெளியான பட்டதாரி படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். ஆனாலும் இந்த படங்களில் இவருக்கு பெரிய அளவில் கவனம் கிடைக்கவில்லை. ரஜினியின் மருமகளாக ஜெயிலர் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது. மலையாளத்திலும் பிக் பிரதர் என்ற படத்தில் நடித்து சிறப்பான கவனத்தைப் பெற்ற மிர்னா, தெலுங்கில் கிரேசி ஃபெல்லோ, உக்ரம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து ஜெயிலர் படத்தில் இவருக்கு லீட் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: தமிழ், தெலுங்கு மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் மிர்னா, நடிப்பிற்கு வருவதற்கு முன்னதாக துபாயில் சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்துள்ளார். ஆனால் நடிகையாகும் விருப்பத்துடன் நாடு திரும்பிய இவருக்கு முதன் முதலில் ரியாலிட்டி ஷோ மூலமாக திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் மிர்னாவை இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியன் ஃபாலோர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிட்டு வரும் மிர்னா, தற்போது ஸீ-த்ரு புடவையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஸீ-த்ரூ புடவையில் மிர்னா: கருப்பு நிற புடவையில் மிர்னா இந்த வீடியோவில் காணப்படுகிறார். இந்த வீடியோவில் முந்தானையை தோளில் போடாமல் கையில் போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் முயற்சியில் மிர்னா இறங்கியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ ஏராளமான ரசிகர்களை கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X