இவர்தான் இரண்டாவது ஹீரோயினாம்... விக்ரமின் 'கோப்ரா'வில் சூப்பர் டீலக்ஸ் நடிகை
Recommended Video
சென்னை: விக்ரமின் கோப்ரா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார் மிருணாளினி ரவி.
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இது அவருக்கு 58-வது படம்.
கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி வருகிறார். இவர் கேஜிஎப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

பல தோற்றம்
தற்போது சென்னையில் நடந்து வரும் இதன் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் வெளிநாடுகளில் நடக்க இருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரம் பல தோற்றங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

மிருணாளினி ரவி
இந்தப் படத்தில், மிருணாளினி ரவி இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார். இவர், தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் அறிமுகமானவர். தொடர்ந்து ஜிகிர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ள அவர், எம்ஜிஆர் மகன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இரண்டாவது ஹீரோயின்
விக்ரம் படத்தில் நடிப்பது பற்றி மிருணாளினி ரவி கூறும்போது, இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறேன். ஆனால் அதை பற்றி அதிகமான தகவலை இப்போது தெரிவிக்க இயலாது.

விரைவில் ஷூட்டிங்
ஆனால், முக்கியமான கேரக்டர் என்பதை மட்டும் சொல்ல முடியும். இதில் நான் பங்குபெறும் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது தொடர்ந்து நல்ல கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











