Mirnalini Ravi: கருப்பு நிற புடவையில் சொக்க வைத்த மிர்ணாளினி.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: கடந்த 2019ம் ஆண்டில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் மிர்ணாளினி ரவி.

முன்னதாக டிக்டாக் உள்ளிட்டவற்றின்மூலம் ஏராளமான வீடியோக்களை பகிர்ந்து அதன்மூலம் பிரபலமானவர் மிர்ணாளினி.

Actress Mirnalini Ravis new photoshoot pictures in black saree makes fans impressive

இதையடுத்து பெங்களூரில் செய்துவந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் முழுமையான கவனத்தை செலுத்தி வருகிறார்.

நடிகை மிர்ணாளினி ரவி: நடிகை மிர்ணாளினி ரவி கடந்த 2019ம் ஆண்டில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். முன்னதாக பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர் பெங்களூரில் பணியாற்றி வந்தார். தன்னுடைய ஓய்வு நேரத்தில் டிக்டாக் உள்ளிட்டவற்றின் மூலம் வீடியோக்களை பகிர்ந்து அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற மிர்ணாளினிக்கு இதன்மூலம் சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்புகள் கதவை தட்டின. இதையடுத்து தன்னுடைய வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

Actress Mirnalini Ravis new photoshoot pictures in black saree makes fans impressive

மிர்ணாளினியின் அடுத்தடுத்த படங்கள்: சூப்பர் டீலக்ஸ் படத்தை தொடர்ந்து சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா என அடுத்தடுத்த படங்களில் விஷால், விக்ரம், சசிக்குமார் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் மிர்ணாளினி. தெலுங்கில் நகடலகொண்ட கணேஷ் படம் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழில் அதிகமான வாய்ப்புகள் இல்லாத நிலையில் தெலுங்கு, கன்னடத்தில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.

Actress Mirnalini Ravis new photoshoot pictures in black saree makes fans impressive

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் மிர்ணாளினி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த வீடியோக்கள், போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு டிரான்ஸ்பரன்ட் சேலையில் அவர் போட்டோஷுட் எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Actress Mirnalini Ravis new photoshoot pictures in black saree makes fans impressive

14 லட்சம் பாலோயர்கள்: தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த மாடர்ன் மற்றும் பாரம்பரிய உடைகளில் அதிகமான படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் மிர்ணாளினி ரவி. 14 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர். வெளிநாடுகளுக்கும் விடுமுறை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவரும் மிர்ணாளினி, இந்த சுற்றுலா கொண்டாட்ட வீடியேக்கள், புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

சொக்க வைத்த மிர்ணாளினி: அடுத்ததாக விஜய் ஆண்டனியுடன் ரோமியோ படத்திலும் இணைந்துள்ள மிர்ணாளினி, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதிகமான விளம்பரங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர், இன்றைய தினம் பிளாக் ப்ரைடேவையொட்டி கருப்பு நிறப் புடவையில் போட்டோஷுட் எடுத்துள்ளதாகவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ ஸீ-த்ரூ புடவையில் இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை கொள்ளைக் கொண்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X