சொந்தங்கள் சூழ.. பிரபல நடிகை திடீர் திருமணம்.. தொழிலதிபரை மணந்தார்.. திரையுலகம் வாழ்த்து!
கொச்சி: பிரபல நடிகை மியா ஜார்ஜ் திருமணம் இன்று பிற்பகல் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
ஜீவா சங்கர் இயக்கிய அமரகாவியம் படம் மூலம் தமிழுக்கு வந்தவர், மலையாள நடிகை மியா ஜார்ஜ்.
அடுத்து, விஷ்ணு விஷால் நடித்த, இன்று நேற்று நாளை, சசிகுமாரின் வெற்றிவேல், தினேஷின், ஒரு நாள் கூத்து, விஜய் ஆண்டனியுடன் எமன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

டிரைவிங் லைசன்ஸ்
மலையாளத்தில் ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் அறிமுகமான மியா ஜார்ஜ். பின்னர், மோகன்லால், பகத் பாசில் நடித்த ரெட் ஒயின்ஸ், பிருத்விராஜ் நடித்த மெமரீஸ், டிரைவிங் லைசன்ஸ், மோகன்லாலின் மிஸ்டர் பிராடு, மம்மூட்டியின் பரோல் உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

நிச்சயதார்த்தம்
தமிழில் இப்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தடை பட்டுள்ளது. இவருக்கும் அஸ்வின் பிலிப் என்ற தொழிலதிபருக்கும் திருமணம் பேசி முடித்திருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் தேவாலயம் ஒன்றில் நடந்தது.

தேதி முடிவாகவில்லை
இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின. இவர்கள் திருமணம் இந்த மாதம் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், 'தேதி முடிவாகவில்லை, கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் திருமணத்தை எப்போது, எப்படி நடத்துவது என்பது பற்றிய குழப்பத்தில் இருப்பதாக, கடந்த சில நாட்களுக்கு முன் மியா ஜார்ஜ் கூறியிருந்தார்.

திருமண சடங்குகள்
இந்நிலையில், இவர்கள் திருமணம் எர்ணாகுளத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இன்று நடந்துள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு திருமண சடங்குகள் தேவாலயத்தில் தொடங்கின. இதில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். கொரோனா பரவல் காரணமாக அதற்கான நடைமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு திருமணம் நடந்தது.
Recommended Video

விருந்து நிகழ்ச்சி
இதையடுத்து அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் திருமணத்துக்காக, அவர் தோழிகள் சில நாட்களுக்கு முன் விருந்து கொடுத்தனர். இந்த விருந்து நிகழ்ச்சியில், மியாவுக்கு அவர்கள் பரிசுகளை கொடுத்து வாழ்த்தியுள்ளனர். அந்தப் புகைப்படங்களை மியா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் முன்னதாக வெளியிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











