கணவருடன் கருத்துவேறுபாடு..விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை..மத போதகரான பிரபல நடிகை!
சென்னை : மகாலட்சுமி என்ற பெயரோடு நடிப்பில் களமிறங்கிய நடிகை தான் மோகினி. பூனை கண்ணழகி, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பார்.
Recommended Video
90களில் அனைத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த மோகினி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்துள்ளார்.
பூனை விழியுடன் இளசுகளை வசியம் செய்த மோகினி, கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு தற்போது மதபோதகராக மாறியுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.

ஈரமான ரோஜாவே
"வா வா அன்பே பூஜை ஒன்று..பூஜைக்கேற்ற பூக்கள் இரண்டு" இந்த பாட்டை நிச்சயம் 90ஸ் இளவட்டங்கள் மறந்து இருக்கமாட்டார்கள். ஈரமான ரோஜாவே படத்தில் சாந்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் மோகினி. கல்லூரி காதல், அதன் பிரிவை அழகான சொன்ன படம் என்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அனைத்து பாடல்களும் ஹிட்
இசைஞானி இளையராஜா இசையில் இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்துப்பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை மோகினிக்கு தமிழில் பட வாய்ப்புகள் வந்தன. புதிய மன்னர்கள், நாடோடி பாட்டுக்காரன் போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன. ஆனால், தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுத்தரவில்லை.

திருமணம்
பட வாய்ப்பு குறைந்ததால் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு பரத் என்னும் தொழிலதிபரை கல்யாணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். இந்த தம்பதிக்கு அனிருத்,அத்வத் என இரண்டு மகன் உள்ளனர். இதையடுத்து, மோகினியின் கணவர் சீக்கியம், ஜைனம், பௌத்தம் மற்றும் இஸ்லாம் பற்றி மேலும் படித்தார். ஒரு பைபிளை படித்து கிறிஸ்தவத்தை ஆராய ஆரம்பித்தார்.

கிறிஸ்தவ போதகராக மாறினார்
இதையடுத்து, நடிகை மோகினியும் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறினார். இதையடுத்து, கணவருடன் கருத்து வேறுபாடு விவாகரத்து என மன அழுத்தத்தில் இருந்த மோகினி இப்போது முழு நேர கிறிஸ்தவ போதகராக மாறி, மத பணிகளில் தீவிரமாக இருக்கிறாராம். இப்போது மனத்தில் எந்தவிதமான பாரமும் இல்லாமல் மனம் தெளிவாக இருப்பதாக நடிகை மோகினி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











