அருகில் வந்து முகத்தை பிடித்து அத்துமீறிய இயக்குநர்.. உடல் நடுங்கி.. பதறி ஓடிய நடிகை!
சென்னை: தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை நாகினி தொடருக்கே உண்டு. அந்த தொடரில் வரும் அனகுண்டா பாம்புக்கு அவ்வளவு மவுசு. வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் வெற்றிநடை போட்ட போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளத்துடன் வெற்றி பெற்ற தொடர் நாகினி சீரியல். இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் தான் மௌனி ராய். இந்த சீரியலில் இவரது நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தற்போது அடுத்தடுத்த படத்தில் கலக்கி வரும் மௌனி ராய், தான் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை கூறியுள்ளார்.
நடிகை மௌனி ராய் இந்தியில் நாகினி சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அந்த சீரியல் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தது. சீரியல் மூலம் பிரபலமான நடிகை மௌரி ராய், இந்திய அளவில் பிரம்மாண்டமான வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த கேஜிஎப் முதல் பாகத்தில் நடித்தார். இப்படத்தில் இவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றால்ர. ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலம் அடைந்து விட்டால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்தன.

பயந்து நடுங்கினேன்: தற்போது இவர் பாலிவுட்டில் நல்ல வாய்ப்புகளை பெற்றுள்ள மௌனி ராய், சிரஞ்சீவி நடிக்கும் Vishwambhara தெலுங்கு படம் ஒன்றிலும், இரண்டு இந்தி படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்து இருக்கும் பேட்டியில், தான் படவாய்ப்பு தேடி அலைந்த போது, ஒரு இயக்குனர் என்னிடம் கதை சொல்வதற்காக அழைத்தார். சுவாரசியமாக கதை சொல்லிக் கொண்டிருந்தார், ஒரு கட்டத்தில் நீச்சல் குளத்தில் ஹீரோயின் விழுந்து விட ஹீரோ அவரை காப்பாற்றுவார். அந்த நேரத்தில் ஹீரோ ஹீரோயின் வாயோடு வாய் வைத்து தண்ணீரை உறிஞ்சுகிறார் என சொல்லிக்கொண்டே, என் அருகில் வந்து எனக்கு முத்தம் கொடுத்து வரம்பு மீறி நடந்து கொண்டார். இயக்குநரில் வரம்பி மீறிய செயலால் நான் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போனேன். என் உடல் நடுங்கத் தொடங்கியது. உடனடியாக அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன். அந்த மோசமான சம்பவத்திற்கு பின், தனிமையில் கதை கேட்பதை தவிர்த்துவிட்டேன் என மௌனி ராய் மோசமான அனுபவத்தை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











