சங்கடத்தில் சமந்தா.. இந்த முறையும் அட்லி ஏமாத்திட்டாரே?.. அல்லு அர்ஜுனுக்கு ஜோடி யார் தெரியுமா?

ஹைதராபாத்: அல்லு அர்ஜுனின் அடுத்த படம் அட்லி உடன் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற பின்னர் அவர் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஏற்கனவே அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது போல, அட்லி இயக்கத்தில் கமிட் ஆனார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு தயாராகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியை தேர்வு செய்துவிட்டார்கள் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.

புஷ்பா 2 படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த அல்லு அர்ஜுன் அடுத்து புஷ்பா 3 படத்தில் நடிக்கத்தான் தனது தேதிகளை தருவார் என பலரும் பேசிக் கொண்டு இருந்தனர். ஆனால் புஷ்பா 3 படத்தின் ப்ரீ புரெடக்‌ஷன் பணிகளுக்கு சில ஆண்டுகள் ஆகும் என்பதால் தனது 22வது படத்தில் அட்லியுடன் கமிட் ஆகியுள்ளார். அட்லிக்கு இது 6வது படம் என்பதாலும் ஏற்கனவே ஜவான் படத்தின் மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததாலும் அவர்கள் கூட்டணி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் லுக் டெஸ்ட் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. அதற்கு காரணம், படத்தின் கதை சூப்பர் ஹீரோ கதை எனக் கூறப்படுகிறது. எனவே, அதற்கான கதாபாத்திரத்தின் லுக்கை சரியாக கட்டமைக்க லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு படக்குழு சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் வந்தது. இந்நிலையில் படத்தின் கதாநாயகியைத் தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

Actress Mrunal Thakur Committed In AA22xA6 Allu Arjun Atlee Movie Samantha Getting Upset

அட்லி: அதாவது படத்தில் மிருணாள் தாக்கூர்-ஐ கமிட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனவும் கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இந்த தகவல் மிருணாள் தக்கூர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே மிருணாள் தாக்கூர் பான் இந்தியா ஸ்டாராக தான் உள்ளார். மேலும் இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடிக்க வேண்டி இருக்கும் என்பதால் மிருணாள் தாக்கூரை படக்குழு தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

மிருணாள் தாக்கூர்: அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் சமந்தா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பலரும் பேசி வந்த நிலையில் தற்போது மிருணாள் தாக்கூர் என்ற தகவல் சமந்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் சமந்தா கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அட்லியின் இரண்டு படங்களில் அதாவது தெறி மற்றும் மெர்சல் என இரண்டு படங்களில் சமந்தா நடித்துள்ளார்.

Actress Mrunal Thakur Committed In AA22xA6 Allu Arjun Atlee Movie Samantha Getting Upset

சமந்தா: பிகில் மற்றும் ஜவான் படத்தில் நயன்தாராவை கமிட் செய்த அட்லி, தனது அடுத்த படத்தில் சமந்தாவை கமிட் செய்வார் என பலரும் எதிர்பார்த்தனர். இது மட்டும் இல்லாமல், சமந்தா கடந்த சில ஆண்டுகளாகவே ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வரும் நிலையில் அவரை தனது படத்தில் கமிட் செய்வார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், சமந்தாவை கமிட் செய்யாமல் போனதற்கு சில காரணங்கள் உள்ளது என பலரும் பேசி வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X