Mrunal Thakur: அண்ணன பாத்தியா.. அப்பாத்த தே.. தே.. நா.. மிருணாள் தாக்கூர் என்னங்க இப்படி மாறீட்டாங்க!

ஹைதராபாத்: நடிகை மிருணாள் தாகூர் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. மிகவும் செலக்டிவான படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் இவர் தற்போது பாலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடன வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகை மிருணாள் தாக்கூர் தெலுங்கில் சீதா ராமம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிவிட்டார். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரமான நூர்ஜஹான் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கம் இப்போது வரை உள்ளது. இந்த படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி இருந்தாலும் படத்தை பலமுறை தியேட்டரிலும், ஓடிடி தளத்திலும் பார்த்த ரசிகர்கள் உள்ளார்கள். இந்த படத்தில் அவரது கதாபாத்திரமும் இவருக்கு ஜோடியாக நடித்த துல்கர் சல்மானின் கதாபாத்திரமும் ரசிகர்களை காதலில் உறைய வைத்தது.

Actress Mrunal Thakur Cute Dance For Thailand Trending Song Anan Ta Pad Chaye
Photo Credit:

கடந்த மாதம் வெளியான தக் லைஃப் படத்தில் இடம் பெற்ற முத்த மழை பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில் முத்த மழை பாடல் படத்தில் இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படம் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் இந்த பாடலைக் கேட்ட ரசிகர்கள், இந்த பாடல் மிகவும் பொருந்திப் போகிற படமாகவும் காட்சியாகவும் இருப்பது, சீதா ராமம் படத்தில் தான் என இணையத்தில் வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வந்தார்கள். அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய படம் சீதா ராமம்.

அடுத்து வெளியாக உள்ள படம்: மிருணாள் தாக்கூர் தற்போது பல மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் சன் ஆஃப் சர்தார் பாகம் 2. இந்த படத்தில் அஜய் தேவ்கன் உடன் இணைந்து நடித்துள்ளார். படம் வரும் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

க்யூட் வீடியோ: அதாவது அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், "ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு உள்ளார். அப்போது அவரது உடற்பயிற்சி அறிவுரையாளர் சொல்லும் ஒரு பயிற்சியை மிருணாள் தாக்கூரால் செய்ய முடியவில்லை. முடியாது எனக் கூறும் மிருணாள், அடுத்த சில நொடிகளிலேயே தனது பயிற்சியாளருடன் சேர்ந்து அண்மையில் இணையத்தில் டிரெண்டான தாய்லாந்து பாடலான அண்ணனா பாத்தியே பாடலுக்கு செம க்யூட்டாக நடனம் ஆடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், அந்த வீடியோவுக்கு நர்மதாவுடன் இணைந்து நடனமாடியது மகிழ்ச்சி. மேலும் அவர் அளித்த பயிற்சிகள் அனைத்துமே தரம் என பதிவிட்டுள்ளார். இவரது இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், மிருணாள் தாக்கூர் என்ன இப்படி செம க்யூட்டாக இருக்காங்க என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X