Mrunal Thakur: அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணையும் சீதாராமம் நாயகி.. அஜித்துடன் கூட்டணி?

சென்னை: நடிகை மிருணாள் தாகூர் அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவருக்கு தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தபோதிலும் முதலில் இவர் இந்தி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர். தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால் அங்கு இவருக்கு சிறப்பான ரீச் கிடைக்காத நிலையில் தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தார். தெலுங்கில் துல்கர் சல்மானுடன் இணைந்து இவர் நடித்த சீதாராமம் படம் மிகப்பெரிய ஹிட். தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமில்லாமல் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களும் மிருணாள் தாகூரை கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் அடுத்தடுத்த வாய்ப்புகளை மிருணாளுக்கு பெற்றுத் தந்து வருகிறது. சமீபத்தில் நானியுடன் இணைந்து நடித்திருந்த Hi Naana படமும் மிருணாளுக்கு சிறப்பான வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. ஆனாலும் அம்மணிக்கு பாலிவுட்டில் நடிக்கும் ஆசை அதிகமாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் பேட்டியொன்றில் பேசிய அவர், பாலிவுட்டில் காதல் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழிலும் அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க கமிட்டாகி வருகிறார் மிருணாள் தாக்கூர்.

Actress Mrunal thakur going to join with tamil top heroes and the announcement expect soon

நடிகை மிருணாள் தாகூர்: நடிகை மிருணாள் தாகூர் இந்தி சீரியல்களில் நடித்து கவனம் பெற்றவர். இதன்மூலம் கிடைத்த புகழுடன் இவருக்கு இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனாலும் சரியான ஹிட் கொடுக்க முடியாமல் திணறிய மிருணாள், தெலுங்கில் துல்கர் சல்மானுடன் இணைந்து சீதாராமம் படத்தில் நடித்தார். இயக்குநர் ஹனு ராகுவிப்பிடு இயக்கத்தில் உருவான இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சிறப்பான லவ் ஸ்டோரியாக ஹிட் கொடுத்தது. இந்தப் படம் மூலம் ஏராளமான தென்னிந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார் மிருணாள் தாகூர். இந்தப் படம் அடுத்தடுத்த படங்களின் வாய்ப்புகளை பெற்றுத் தந்து வருகிறது.

அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்: தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான Hi Naana படமும் நானி, மிருணாள் லீட் கேரக்டரில் நடிக்க சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ள கல்கி 2898 AD படத்தில் மிருணாள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் இந்திய அளவில் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தில் மிருணாளும் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னணி ஹீரோக்களுடன் கூட்டணி: இதையடுத்து சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்திலும் மிருணாள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து சிம்புவின் STR48 படத்திலும் சிம்புவின் நாயகியாக மிருணாள் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் ஹீரோ மற்றும் வில்லன் என இருவேறு கெட்டப்பில் சிம்பு நடிக்கவுள்ள நிலையில் அதில் ஒருவருக்கு மிருணாள் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். தொடர்ந்து அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகவுள்ள ஏகே63 படத்திலும் மிருணாள் தான் நாயகி என்றும் அவரிடம் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தபுவும் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: இதனிடையே தேசிய விருது இயக்குநர் ஒருவருடனும் இணைந்து பணியாற்ற மிருணாளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் மிருணாள் தாகூர். இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதனால் இவரை 11 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் மிருணாள் நடித்துள்ள தி ஃபேமிலி ஸ்டார் படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X