தனுஷுடன் ரகசிய திருமணம்? வதந்தியால் குடும்பத்தில் குழப்பம்.. மிருணாள் தாக்கூர் வேதனை!
சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் இருவரும் காதலித்து வருவதாகவும், காதலர் தினம் அன்று திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வதந்திகள் பரவிய நிலையில், இதுகுறித்து பேட்டி அளித்த நடிகை மிருணாள் தாக்கூர், தனுஷூடன் ரகசிய திருமணம் என்ற வதந்தியால் குடும்பதில் பல குழப்பம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டின் கடைசியில் இருந்து தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசு பரவி வருகிறது. இதற்கு காரணம் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது செல்ஃபி எடுத்துக்கொண்டது தான். அந்த போட்டோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளானது. அந்த போட்டோவில், இருவரும் நெருக்கமாக இருந்ததால், இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் பரவின. இதையடுத்து,காதலர் தினத்தன்று அதாவது பிப்ரவர் 14ந் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி பரவியது.

மிருணாள் தாக்கூர் பேட்டி: இந்நிலையில் நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் நடிகர் சித்தாந்த் சதுர்வேதி இணைந்து நடித்துள்ள 'தோ தீவானே ஷெஹர் மேன்' படம் நேற்று, திரையரங்குகளில் வெளியாது. இந்த படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டு பேசிய மிருணாள், தனுஷூடன் ரகசிய திருமணம்? வதந்தியால் என் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்து கொள்ளும் படி பெற்றோர் தினமும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். என் அப்பா என்னிடம் 'நீ செட்டில் ஆக வேண்டும்' என்கிறார். நான் உடனே நல்ல மாப்பிள்ளை எங்கே என்று கேட்டேன். எனக்கு திருமணம் பற்றி எந்தவித பயமும் இல்லை என்றும், ஆனால், எனக்கு பொருத்தமான வரன் அமையவில்லை.
திருமண கிசுகிசு: திருமணம் என்பது வெறும் சடங்கிற்காகச் செய்ய வேண்டிய ஒன்றில்லை. முன்பு பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால், இப்போது, நண்பர்கள் கூட இருவரைச் சேர்த்து வைக்கிறார்கள். எது எப்படியோ காதல் திருமணமோ நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அதுவே முக்கியம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்ல தம்பதிகளாக வாழ வேண்டும். குறிப்பாக இரு குடும்பத்தின் ஒப்புதலும் மிக அவசியம். ஏனெனில் திருமணமென்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் மட்டுமானதல்ல. அது இரு குடும்பங்களுக்கும் இடையிலானது என்றார். தொடர்ந்து தனுஷுடனான வதந்தி குறித்து பேசிய மிருணாள் தாகூர், இதை யார் ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியவில்லை. தனுஷுடன் எனக்குத் திருமணம் நடந்ததுபோல உருவாக்கப்பட்ட ஒரு AI வீடியோவை பார்த்தேன். இதுரு ஒரு பயங்கரமான செயல் என்று அந்த வீடியோவில் மிருணாள் தாகூர் பேசி உள்ளார்


Click it and Unblock the Notifications











