பூக்களுக்கு நடுவே பூவாக பூத்திருந்த மிருணாள் தாக்கூர்.. வர்ணிக்கும் ரசிகர்கள்!

சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகைகளுள் ஒருவர் தான் மிருணாள் தாக்கூர். பாலிவுட் சினிமாவில் பிரபல இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், மிக குறுகிய காலத்திலேயே பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிவிட்டார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாவில் அழகான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

மிருணாள் தாகூர், ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ஹர்சவர்தன் இயக்கத்தில் துல்கர் சர்மானுக்கு ஜோடியாக சீதா ராமம் படத்தில் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். நீண்ட நாட்களுக்கு பின் ஒரு அழகான காதல் கதையை திரையில் பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போனார்கள். அந்த அளவுக்கு துல்கர் சல்மானின் நடிப்பும், மிரணாள் தாகூரின் நடிப்பும் எதார்த்தமாக இருந்தது.

mrunal thakur instagram photos

லஸ்ட் ஸ்டோரீஸ் 2: இந்த படத்தை தொடர்ந்து 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' ஆந்தாலஜி தொடரில் விவகாரமான ரோலில் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில், தமன்னா, மிருணாள் தாகூர், விஜய் வர்மா, கஜோல் ஆகியோர் நடித்திருந்தனர். ஆர். பால்கி, கொங்கோனா சென் இணைந்து நான்கு வித்தியாசமான கதையை கொடுத்துள்ளனர். இதில் 'Made For Each Other' ஆந்தாலஜி தொடரில் நடித்திருந்தார். அதன் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர், தெலுங்கில் அண்மையில் நானியுடன் "ஹாய் நான்னா" படத்தில் நடித்தார். பின் விஜய் தேவரக்கொண்டாவுடன் "பேமிலி ஸ்டார்" என்ற படத்தில் நடித்தார். தற்போது சர்தார் 2 படத்தில் கமிட்டாகி உள்ளார்.

படவாய்ப்புகள் குறைந்தன: இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மிருணாள் தாக்கூர், நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை நான் விரும்பியதில்லை. அதை எனது பெற்றோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால் பல படங்களை மறுத்தேன். ஒரு நடிகராக, நீங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும், ஏனென்றால் சில நேரங்களில் அது படத்திற்கு தேவையாக இருக்கும். ஆனால், அப்படி முத்தக்காட்சியில் நான் நடிக்க நோ சொன்னதால் பட வாய்ப்புகள் வரவில்லை என்றார்.

பூக்களுக்கு நடுவே பூ: தற்போது தனக்கான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை மிருணாள் தாக்கூர், மற்ற நடிகைகளை போல இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது, பூக்களுக்கு நடுவே விதவிதமாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ், அவரை பார்த்து கவிதை பாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X