Mrunal thakur: காஞ்சனா 4 படத்தில் இணையும் மிருணாள் தாகூர்.. வெல்கம் செய்ய தயாராகும் ரசிகாஸ்!
சென்னை: மிருணாள் தாகூர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களின் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் சிவகார்த்திகேயனுடன் எஸ்கே 23 படத்தில் இணையவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படத்தில் தற்போது ருக்மிணி வசந்த் இணைந்து நடித்து வருகிறார்.
முன்னதாக துல்கர் சல்மானுடன் மிருணாள் தாகூர் இணைந்து நடித்து வெளியான சீதாராமம் படம் தமிழில் டப்பிங் ஆகி சிறப்பான அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இவர் அடுத்ததாக தமிழில் நடிக்க வேண்டுமென ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக காஞ்சனா 4 படத்தில் ராகவா லாரன்சுடன் மிருணாள் தாகூர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகை மிருணாள் தாகூர்: நடிகை மிருணாள் தாகூர் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது சீதாராமம், ஹாய் நானா, பேமிலி ஸ்டார், லஸ்ட் ஸ்டோரீஸ் படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. இதையடுத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார் மிருணாள் தாகூர். குறிப்பாக துல்கர் சல்மானுடன் மிருணாள் தாகூர் இணைந்து நடித்த சீதாராமம் படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. இந்த படம் அவரது அழகு மற்றும் கவர்ச்சியான தோற்றத்தை ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது.
மிஸ்ஸான சிவகார்த்திகேயன் பட வாய்ப்பு: இந்நிலையில் தமிழிலும் அவர் சிவகார்த்திகேயனுடன் எஸ்கே 23 படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தில் நாயகியாக ருக்மணி வசனத்தை ஏ ஆர் முருகதாஸ் செலக்ட் செய்திருந்தார். மிருணாள் தாகூரின் தேதிகள் ஒத்துவரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்ததாக ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகவுள்ள காஞ்சனா 4 படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் தற்போது நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காஞ்சனா 4 படத்தில் மிருணாள்: மிருணாள் தாகூர், ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள காஞ்சனா 4 படத்தில் நடிக்க உள்ளது குறித்து ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மிகவும் அழகான நாயகியான மிருணாள் தாகூரை அமைதியான கேரக்டர்களில் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள், அடுத்ததாக அவர் பேய் படத்தின் இணையவுள்ளது குறித்தும் அவரது கேரக்டர் படத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்தும் தற்போதே யோசிக்க துவங்கியுள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பரில் சூட்டிங்: சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா கூட்டணியில் கடந்த மாதத்தில் வெளியான அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்துள்ளது. இதையடுத்து தற்போது காஞ்சனா 4 படத்தை இயக்கி தயாரித்து நடிக்கும் வேலைகளில் ராகவா லாரன்ஸ் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தின் கதைக்களம் மிகச் சிறப்பாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











