Mrunal Thakur: புத்திசாலியான நடிகை! பிறந்த நாள் கொண்டாடும் சீதா ராமம் மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை ஒரு நடிகை மனதை உருக வைக்கும் காதல் காட்சிகளில் நடித்துவிட்டால், அவர்களைக் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். அப்படி காதல் காட்சிகளில் பட்டையைக் கிளப்பி மாபெறும் வெற்றிப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். இவர் இன்று தனது 32வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இந்த நாளில் அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் அவரது சொத்து மதிப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சீதா ராமம் படத்தின் மூலம் தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் நடிகை மிருணாள் தாகூர். இவரது காதல் ததும்பும் நடிப்பின் காரணமாக தமிழ் ரசிகர்களின் அபிமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். இன்னும் சொல்லப்போனால், காதலை மைய்யப்படுத்திய படம் என்றால், தூக்கிட்டு வாங்கடா செல்லத்த என ரசிகர்களே இணையத்தில் கோரிக்கை வைக்கும் அளவிற்கு மிகவும் பிடித்த நடிகை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மிருணாள் தாகூர் இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடிப் படங்களில் நடித்து வருகின்றார். இவர் இன்னும் தமிழில் நேரடிப் படங்களில் நடிக்கவில்லை. சிறு வயதில் இருந்தே நடிப்பதில் ஆர்வம் கொண்ட மிருணாள் கல்லுரி படிக்கும்போது ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். அதன் பின்னர் ஜீ தொலைகாட்சி தொடரில் நடித்தார்.
சிறந்த நடிகை: சின்னத்திரையில் அறிமுகமான இரண்டு ஆண்டுகளில் வெள்ளித்திரையில் கால் பதிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து வெள்ளித்திரையில் நடித்து வரும் மிருணாள் தனக்கான பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார். சீதா ராமம் படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான சைமா விருதினை ஒரு வாரத்திற்கு முன்னர் பெற்றார்.

13 மில்லியன்: மிருணாள் தாகூரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர். தன்னை பின் தொடரும் ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக அவ்வபோது போட்டோ சூட் நடத்தியும், வீடியோக்கள் எடுத்தும் பகிர்ந்து வருகின்றார். மிகவும் திறமையான மற்றும் தைரியமான பெண்ணாக இருப்பதால் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு உடல் நலம் பேணுதல் தொடர்பான அட்வைஸ்களையும் கூறி வருகின்றார்.

சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு: மிருணாள் தாகூர் தற்போது ஒரு படத்திற்கு ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்குகின்றார். தற்போது இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 33 கோடிகளாக இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இவரின் சொத்து மதிப்பு கடகடவென உயர்ந்துள்ளது. படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் விளம்பரங்களில் நடித்தும் தனது வருமானத்தை பெறுக்கி வருகின்றார்.

ஊர் சுற்றும் ஆர்வம்: ஆடம்பர வாழ்க்கை மீது பெரிய ஆர்வம் இவருக்கு இல்லை என்றாலும் அதிகப்படியாக ஊர் சுற்றுவதில் கவனம் செலுத்தி வருகின்றார். இது மட்டும் இல்லாமல் மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதியையும் வாங்கியுள்ளார். நடிகை மிருணாள் தாகூர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை நோக்கி நகர நினைக்கும் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றார் எனக் கூறலாம். குறிப்பாக பாலிவுட் போன்ற போட்டி நிறைந்த சினிமால் உலகில் நுழைந்தது மட்டும் இல்லாமல் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி அதனை தக்கவைத்தும் வருகின்றார். தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க ஃபிலிமி பீட் தமிழ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications