என் வழிகாட்டி.. அவர் தான் காரணம்.. மிருணாள் தாக்கூர் புகழ்ந்த நடிகர் யார் தெரியுமா?
சென்னை: ஹிந்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை மிருணாள் தாக்கூர். இவர் என் வழிகாட்டி, என் நண்பன், அவர் தான் எனக்கு ஒரு முன்னுதாரணம் எல்லாமே அவர் தான் என தன்னுடன் நடித்த சக நடிகரை புகழ்ந்து தள்ளி உள்ளார்.
கீத கோவிந்தம் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த விஜய் தேவரகொண்டா பரசுராம் கூட்டணி மீண்டும் ஒருமுறை பேமிலி ஸ்டார் என்ற படத்தில் இணைந்துள்ளது. ரொமான்ஸ், காதல், மசாலா, இசை என நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக இத்திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். மேலும், கே. யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். ஏப்ரல் 5ந் தேதி வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

பிடித்த நடிகர்: இப்படத்தின், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, மிருணாள் தாக்கூரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், துல்கர் சல்மான்தான் எனக்குப் பிடித்த நடிகர். சீதா ராமம் படத்தில் நடித்தபோது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஏன் என்றால், எனக்கு மொழி தெரியாவில்லை.
உண்மையில் அழுதேன்: அப்போது அவர் தான் எனக்கு ஊக்கமளித்தார். பல மொழிப் படங்களில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். அவர்தான் எனக்கு ஒரு முன்னுதாரணம். எனது வழிகாட்டி, நண்பர், பிடித்த நடிகர் எல்லாமே அவர்தான். ஆனால் சீதா ராமம் படம் வெளியான போது, நான் உண்மையில் அழுதேன், ஆனால் ஒவ்வொரு துளி கண்ணீரும் எனக்குப் பாராட்டுக்களைத் தந்தது என்று மிருணாள் தாகூர் கூறினார்.

சீதா ராமம்: நடிகை மிருணாள் தாகூர், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஹர்சவர்தன் இயக்கத்தில் துல்கர் சர்மானுக்கு ஜோடியாக சீதா ராமம் படத்தில் தழையத் தழைய புடவை கட்டிக்கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பீல் குட் லவ் ஸ்டோரியை நீண்ட நாட்களுக்கு பின் திரையில் பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போனார்கள். அந்த அளவுக்கு துல்கர் சல்மானின் நடிப்பும், மிரணாள் தாகூரின் நடிப்பும் எதார்த்தமாக இருந்தது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
லஸ்ட் ஸ்டோரீஸ் 2: இந்த படத்தை தொடர்ந்து 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' ஆந்தாலஜி தொடரில் விவகாரமாக நடித்தார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த 'லஸ்ட் ஸ்டோரீஸ்' தொடரில் பால்கி இயக்கத்தில் முதல் சீரிஸாக 'Made For Each Other' இடம்பெற்றுள்ளது. திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்வது குறித்து இது பேசுகிறது.


Click it and Unblock the Notifications











