படுத்தபடுக்கையாக கோமாவில்? கடவுள் எனக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.. முமைத் கான் வேதனை!

சென்னை: என் பேரு மீனா குமாரி என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை முமைத் கான். இவர் தற்போது அளித்த பேட்டியில் கோமாவில் இருந்து மீண்டு மறுபிறவி எடுத்து இருப்பதாக கூறி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

நடிகை முமைத் கான் 2002 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியதன் மூலம், சினிமாவில் என்ட்ரியானார். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆகிய தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ள இவர், கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில், நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து, விஜய்யின் போக்கிரி படத்தில், என் செல்லப்பேரு ஆப்பிள் பாடலுக்கும், கந்தசாமி படத்தில் 'என் பேரு மீனாகுமாரி' உள்பட பல படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

mumaith khan health
Photo Credit:

நடிகை முமைத் கான்: இவர் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடுவது மட்டும் இல்லாமல், மம்முட்டியான், மறந்தேன் மன்னித்தேன், மருதமலை, வில்லு உள்ளிட்ட பல படங்களில் கௌரவ வேடங்களிலும் நடித்து உள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களாக சினிமாவில் மார்க்கெட் இல்லாதால், வீட்டில் பொழுதை கழித்து வந்த அவர் இணையத்தில் விதவிதமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

கோமாவில்: அண்மையில் இவர் இந்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சில ஆண்டுகளுக்கு முன் வீட்டில் இருக்கும் பெட்டில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு விட்டது. இதில் மூளைக்கு செல்லும் 5 நரம்புகள் வெடித்துவிட்டன. அதனால் 15 நாட்களாக கோமாவில் இருந்தார். படுத்த படுக்கையாக இருந்தேன். ஆனால், கோமாவில் இருந்து மீண்டு விட்டாலும், குறைந்தது 7 ஆண்டுகள் எந்த வேலையும் செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறினார். இதனால், பழையபடி வேலை செய்யவோ, கனமான பொருட்களை தூக்கவோ கூடாது, இதனால், எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறேன். நான் ஓய்வில் இருந்த இந்த 7 ஆண்டுகளில் என்னை நானெ தெரிந்து கொண்டேன்,
என்னை முமைத் கானாக்கி அழகு பார்த்தார் கடவுள். பின்னர் அவரே என் கெரியருக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார் என தீராத மன வேதனையுடன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X