யார் சொன்னது எனக்கு மார்க்கெட் போனுச்சுனு.. என்னைவிட மூத்த நடிகைகள் எல்லாம் அப்படி.. மும்தாஜ் அதிரடி

சென்னை: கோலிவுட்டில் முக்கியமான கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் மும்தாஜ். டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் முன்னணி ஹீரோவான விஜய் உள்ளிட்டோருடன் நடித்திருக்கிறார். குறிப்பாக குஷி படத்தில் அவர் நடனம் ஆடிய கட்டிப்புடி கட்டிப்புடி டா பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இடையில் பிக்பாஸில் கலந்துகொண்ட அவர் இப்போது சில பேட்டிகளை கொடுத்துவருகிறார். அந்தவகையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

மும்பையை பூர்வீகமாகக் கொண்ட நக்மா கான் எனும் இயற்பெயரை கொண்ட மும்தாஜுக்கு பள்ளி படிக்கும்போதே சினிமா மீது ஆர்வம் வந்துவிட்டது. அவரது வீட்டின் அறை முழுவதும் நடிகை ஸ்ரீதேவியின் போஸ்டர்களே இடம்பெற்றிருக்கும். சினிமாவில் முயற்சித்த மும்தாஜுக்கு 1996ஆம் ஆண்டு திலீப்குமாருடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. இதனையடுத்து நடிப்பு பயிற்சி பெற்ற அவருக்கு சேத்தன் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சேத்தன் ஆனந்த் இறந்துவிட்டதால் அந்தப் படமும் கைவிடப்பட்டது.

Actress Mumtaj Open Talks about Her Cinema Career and Experience

தமிழில் மும்தாஜ்: இதனையடுத்துதான் டி.ராஜேந்தர் 1999ஆம் ஆண்டு மோனிசா என் மோனலிசா படத்தை ஆரம்பித்தார். புதுமுகங்களை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் டிஆருக்கு எழ மும்பை சென்று மும்தாஜை புக் செய்தார். எனவே தமிழ் படம் மூலம் மும்தாஜ் திரையுலகுக்கு அறிமுகமானார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி மோனிசா என் மோனாலிசா படம் வெற்றியடையவில்லை. படம் வெற்றியடையாவிட்டாலும் மும்தாஜின் அழகில் ரசிகர்கள் சொக்கிப்போயினர்.

போராட்டமான ஆண்டு: மோனிசா என் மோனாலிசா படத்துக்கு பிறகு சத்யராஜ் நடித்த மலபார் போலீஸில் நடித்தார் மும்தாஜ். அந்தப் படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது. இப்படிபட்ட சூழலில் தெலுங்கில் ஒரு படத்தில் பாடலுக்கு மட்டும் நடனமாடிய அவர் மலையாளத்தில் நான்சி பரேரா படத்தில் நடித்தார். அதனையடுத்து தமிழில் உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். இப்படி 1999ஆம் ஆண்டு அவருக்கு ஒரு போராட்ட ஆண்டாகவே அமைந்தது.

திருப்புமுனை ஏற்படுத்திய குஷி: இப்படி நிலையான இடத்துக்கு போராடிக்கொண்டிருந்த மும்தாஜுக்கு குஷி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மும்தாஜ். படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், 'கட்டிப்பிடி கட்டிப்பிடிடா'பாடலுக்கு விஜய்யுடன் அவர் போட்ட நடனத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களும் விழுந்துவிட்டனர்.

அதனையடுத்து தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தும், ஒரு பாடலுக்கு நடனமாடியும் பிஸியாகவே வலம் வந்தார் மும்தாஜ். காலப்போக்கில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தமிழில் கடைசியாக லாரன்ஸுடன் ராஜாதிராஜா படத்தில் நடித்திருந்தார். அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

மும்தாஜ் பேட்டி: இப்போது படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் மும்தாஜ் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவுக்கு நான் வரவில்லை என்பதை தெளிவுப்படுத்திக்கொள்கிறேன். இந்தத் துறையில் நான் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு எனக்குள் பெரிய பொருளாதார சுதந்திரம் கிடைத்தது. அதனால் இனி குடும்பத்தில் பணம் கேட்கக்கூடாது என்பதை உறுதி செய்துகொண்டு படங்களில் நடித்தேன். அதனால் கிடைத்த பணத்தை வைத்து எனது தேவைகளை பூர்த்தி செய்துகொண்டேன்.

சினிமாவே வேண்டாம்: ஒருகட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன். அதற்கு காரணம் நாம் ஒரு விஷயத்துக்கு பணிவுடன் இருக்கிறோம் என்றால் அங்கிருந்து வரும் கட்டளைகளுக்கு அடி பணிய வேண்டும். ஆனால் எனக்கோ, எதற்கு அடிபணிய வேண்டும்; எதற்கு அடி பணிய கூடாது என்பதில் குழப்பம் இருந்தது. பிரபல்யத்துக்காக மும்தாஜ் இஸ்லாத்தை பயன்படுத்துகிறார் என்கிறார்கள். நான் ஆரம்பத்திலிருந்தே இஸ்லாம் கருத்துக்களை கேட்டவள். எனவே அவ்வாறு சொல்பவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை.

மார்க்கெட் போய்விட்டதா?: இன்னும் சிலரோ எனக்கு மார்க்கெட் போய்விட்டது என்கிறார்கள். உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு மார்க்கெட் போய்விட்டது என்று. என்னைவிட வயது மிகுந்த பெண்கள் இன்றும் நன்றாக ஒர்க் அவுட் செய்து தன்னை அழகாக காண்பித்து கிளாமராக வலம் வருகிறார்கள். அல்லா எனக்கு வழிகாட்டவில்லை என்றால் நானும் அவர்களை போலத்தான் இப்போது செய்து கொண்டிருந்திருப்பேன்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X