தெருவில் ஆடுனவ நான்.. என் வாழ்க்கை என் கையில் இல்லை.. மும்தாஜ் பேட்டி!
சென்னை: 90 கால கட்டத்தில் கொடி கட்டி பறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடா சினிமாவில் முன்னணி நடிகையாக பல படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் நடிகை மும்தாஜ். தற்போது இவர் நடிப்பை விட்டுவிட்டு ஆன்மீக வாழ்க்கையைத் தேர்வு செய்து அல்லாவுக்காக வாழ்ந்து வருவதாக மனம் திறந்து பேசி வருகிறார். பிரபல யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், பெண்களின் உடை, சமூக பார்வை மற்றும் சினிமா துறையில் தாம் சந்தித்த அழுத்தங்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.
அந்த பேட்டியில், ஒரு பெண் மிகவும் கவர்ச்சியான உடையில் வெளியே வந்தால், ஆண்கள் அந்த பெண்ணை காலில் இருந்து தலை வரை பார்ப்பார்கள், அவர்களின் பார்வை வேறுவிதமாக இருக்கும். ஆனால், அபாயா அணிந்து வந்தால் ஆண்கள் அந்த பெண்ணை மரியாதையுடன் பார்ப்பார்கள். நான் ஷார்ட் டிரெஸ் போட்டுக்கொண்டு தெருவில் ஆடி இருக்கிறேன். இப்போது 'அபாயா' அணிந்தும் வெளியில் செல்கிறேன். இந்த இரண்டு பார்வைகளுக்கும் இருக்கும் வேறுபாடு என்ன என்பதை என்னால் உணரமுடிகிறது என்றார்.

நடிகை மும்தாஜ்: தொடர்ந்து சினிமாவில் கவர்ச்சியாக நடித்தது குறித்து பேசிய நடிகை மும்தாஜ், நான் ஒரு நடிகையாக இருந்தபோது, என்னுடைய வாழ்க்கையும், கேரியரும் இயக்குநர்கள் கையில் தான் இருந்தது. ஒரு உடையை என்னிடம் காட்டுவார்கள், அதே உடை ஷூட்டிங் ஸ்பாட்டில் இன்னும் சிறியதாகி இருக்கும், என்ன சார் ஏன் இவ்வளவு சிறிய உடை என்று கேட்டால், இயக்குநர் தான் குறைக்க சொன்னார் என்று சொல்வார்கள்.
தெருவில் ஆடி இருக்கிறேன்: இயக்குநர் க்ளாமரஸ் சாங்க் மேடம், இப்படி காஸ்ட்யூம் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்பார். நான் ஒரு நடிகை, இயக்குநர் சொல்வதை தான் நான் கேட்க வேண்டும், அதுதான் உண்மையான ஒடுக்குமுறை. ஒரு கிரியேஷனுக்காக, ஒரு வாய்ப்புக்காக, மற்றவர்களின் பேச்சைக் கேட்டு நான் வாழ்ந்திருக்கிறேன். இன்று அந்த வாழ்க்கையிலிருந்து விலகி அமைதியாக வாழ்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மும்தாஜின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications