Mumtaz: என்னை மாதிரி நல்லவளும் இல்லை.. கெட்டவளும் இல்லை.. நடிகை மும்தாஜ் ஓபன்!
சென்னை: நடிகை மும்தாஜ் 90களின் காலகட்டத்தில் சிறப்பான நடிகையாக வலம் வந்தவர். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள மும்தாஜ், ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகினார். 43 வயதான நிலையிலும் மும்தாஜ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.
தனக்கு நோய் பாதிப்பு இருப்பதாகவும் அதனால்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் மும்தாஜ் தனது சமீபத்திய பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார். தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் அவர் கண்டிப்பாக நல்ல மருத்துவராக இருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் நோயாளியான தனக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் மும்தாஜ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை மும்தாஜ்: நடிகை மும்தாஜ் 90களின் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். மோனிஷா என் மோனலிசா படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த மும்தாஜ், தொடர்ந்து லூட்டி, குஷி, மலபார் போலீஸ் உள்ளிட்ட படங்களில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளார். பல பாடல்களுக்கு கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார். விஜய்யுடன் குஷி படத்தில் இவர் ஆட்டம் போட்ட கட்டிப்புடிடா பாடல் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட். ஒரு கட்டத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த மும்தாஜ் சினிமாவில் இருந்து விலகினார்.
வில்லியாக மும்தாஜ்: இறுதியாக ராகவா லாரன்சின் ராஜாதி ராஜா படத்தில் வில்லியாக அதிரடி காட்டினார் மும்தாஜ். 43 வயதான நிலையிலும் இன்னும் மும்தாஜ் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இதுகுறித்து தனது பேட்டியொன்றில் பேசியுள்ளார். தனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை இருப்பதாகவும் ஆனால் தனக்கு இருக்கும் நோய் காரணமாக தன்னால் திருமணம் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தன்னைப்போல நல்லவளும் இல்லை கெட்டவளும் இல்லை என்று கூறியுள்ள மும்தாஜ்,எவ்வளவு அழகாக இருந்தாலும் தனக்குள் ஒரு ராட்சசி இருப்பதாகவும் தன்னை யார் திருமணம் செய்துக் கொள்வார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருமணம் குறித்து மும்தாஜ்: தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் அவர் கண்டிப்பாக ஒரு சிறந்த மருத்துவராக இருக்க வேண்டும் என்றும் மும்தாஜ் கூறியுள்ளார் அப்போதுதான் நோயாளியான தன்னை ட்ரீட் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள மும்தாஜ், தான் முன்னதாக செய்த விஷயங்களுக்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ள மும்தாஜ், தொடர்ந்து நடிக்காதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது.
வதந்திகள் குறித்து வருத்தம்: தனக்கு 25 வயதான நிலையிலேயே தன்னுடைய நோய் பாதிப்பு குறித்து தெரிந்துக் கொண்டதாகவும் அதனால்தான் திருமணம் செய்யாமல் இருப்பதாகவும் மும்தாஜ் தெரிவித்துள்ளார். ஆனால் தன் திருமண வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். இவரது இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











