முத்தத்திற்கு பயந்து ஒதுங்கிப்போன நடிகை... யார்ன்னு தெரியுமா?
சென்னை : ஹாலிவுட் படங்களில் மட்டுமே பரவலாக முத்தக்காட்சிகள் இயல்பாக இருக்கும்.
இந்திய மொழிப் படங்களில் குறிப்பாக தமிழ் படங்களில் முத்தக்காட்சி என்றாலே உலகநாயகன் முகம்தான் ரசிகர்களுக்கு நியாபகம் வரும்.
தற்போது கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் முத்தக்காட்சிகளை பயன்படுத்தி வருகின்றனர் இயக்குநர்கள்.

ஹாலிவுட்டில் முத்தக்காட்சிகள்
ஹாலிவுட்டில் முத்தக்காட்சிகள் என்பது மிகவும் பரவலான ஒன்று. காட்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் படத்தில் அதை மிகவும் இயல்பாக போகிற போக்கில் இயக்குநர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்திய மொழிப் படங்களில் குறிப்பாக தமிழ் படங்களில் முத்தக்காட்சிகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.

கமலுடன் நடிக்க மறுத்த நதியா
இதனிடையே, முத்தக்காட்சியில் நடிக்க வேண்டி வருமோ என்ற பயத்திலேயே அவருடன் நடிகை நதியா நடிக்க மறுத்ததாக அப்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. முன்னணி நடிகராக இருந்த கமலுடன் அறிமுக நடிகையாக இருந்த நதியா நடிக்க மறுத்தது குறித்து பின்னாளில் அவர் வருத்தம் தெரிவித்ததும் நடந்தது.

சிறப்பான அறிமுகம்
நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு படத்தின்மூலம் மலையாளத்தில் அறிமுகமான நதியா, அதன் தமிழ் ரீமேக்கான பூவே பூச்சூடவா ஆகிய படங்களின் வெற்றி மூலம் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நதியா. அவரது நடிப்பு மட்டுமில்லாமல் கொண்டை, கம்மல் உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன.

நதியாவை மிரட்டிய முகேஷ்
இதனிடையே மலையாளத்தில் முத்தத்தை வைத்து நதியாவை மிரட்டிய நடிகர் முகேஷ் குறித்தும் நதியா பகிர்ந்துள்ளார். நகைச்சுவை உணர்வு மிக்க முகேஷை ஜோக்கர் என்று தொடர்ந்து நதியா அழைத்ததாகவும் அதனால் கடுப்பான அவர் இனி ஜோக்கர் என்று கூறினால் கிஸ் பண்ணிடுவேன் என்று மிரட்ட இதையடுத்து பயந்த நதியா அவரை ஜோக்கர் என்று கூறுவதை நிறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
Recommended Video

சிறப்பான ரீ என்ட்ரி
80களில் முன்னணி நடிகையாக இருந்தபோதே திருமணம் செய்துக் கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனவர் நதியா. தற்போது எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின்மூலம் ரீ என்ட்ரி கொடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது கேரியரில் முத்தம் இவ்வாறு விளையாடியுள்ளது.


Click it and Unblock the Notifications











