34 வருஷமாச்சு… மனசில் அப்படியே பசுமையா இருக்கு… நதியாவின் மலரும் நினைவு!
சென்னை : 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த நதியா விஜய்காந்துடன் இருக்கும் பழைய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பூமலை பொழியுது திரைப்படம் தான், விஜய்காந்துடன் நான் நடித்த முதல் திரைப்படம் என்று பழைய நினைவுகளை நினைவு கூர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல குவிந்து வருகின்றன.

அறிமுகம்
மலையாள நடிகையான நதியா பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் தனது அறிமுகத்தை கொடுத்து தமிழ் ரசிகர்களை ஆட்கொண்டார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்தார்.

சிறப்பாக நடித்தார்
அன்புள்ள அப்பா திரைப்படத்தில் சிவாஜிக்கு மகளாக நடித்திருந்தார் நதியா. இப்படம் அப்பா மகள் செண்டிமெண்ட் திரைப்படமாக அமைந்தது. ஏவிஎம் தயாரித்த இப்படம் திரையரங்கில் நீண்ட நாட்கள் ஒடியது. மேலும், இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நதியாவின் பெயர் தேசிய விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

கால்ஷீட் பிரச்சினை
மணிரத்தினம் எழுதி இயக்கிய மௌன ராகம் திரைப்படத்தில் ரேவதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் நதியாவிடத்தில் தான் பேச்சுவார்த்தை நடந்தப்பட்டது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக நதியாவால் நடிக்க முடியாமல் போனது

ரீ எண்ட்ரி
திருமணத்திற்கு பிறகு லண்டனில் செட்டிலான நதியா நீண்ட இடைவெளிக்குப்பிறகு எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார். மேலும் விஷாலுடன் தாமிரபரணி திரைப்படத்தில் பிடிவாதமான அத்தையாகவும், சுந்தர் சியுடன் சண்டை திரைப்படத்தில் மிரட்டும் மாமியாராக நடித்திருந்தார்.

மலரும் நினைவு
இந்நிலையில் நடிகை நதியான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விஜய்காந்துடன் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 1987ம் ஆண்டு வெளியான பூமலை பொழியுது திரைப்படம் தான் விஜய்காந்துடன் நான் நடித்த முதல் திரைப்படம் என்றும். மறைந்த அழகப்பன் இயக்கிய இப்படத்திற்கு ஆர்டி பர்மன் இசைமைத்து இருந்தார் என்று கூறினார்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு
இப்படத்தின் படப்பிடிப்பு ஜப்பான் மற்றும் ஹாங்காங்கில் நடைபெற்றது. முதன்முதலாக நான் வெளிநாடு சென்று நடித்த திரைப்படமும் இதுதான். மேலும், விஜய்காந்துடன் நான் ஜோடியாக நடித்த ஒரே படமும் இதுதான் என்று தனது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்துள்ளார் நதியா.


Click it and Unblock the Notifications











