ஒற்றை காலை தூக்கி யோகா செய்யும் நதியா… இளமையின் ரகசியம் இது தானா?
சென்னை : 80களில் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகிகளில் முதன்மையானவராக இருந்தார் நதியா.
Recommended Video
மலையாள நடிகையான நதியா பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் தனது அறிமுகத்தை கொடுத்து தமிழ் ரசிகர்களை ஆட்கொண்டார்.
மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நதியா, யோகா செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இது இப்போது டிரெண்டிங்கில் உள்ளது.

அறிமுகம்
பூவே பூச்சூடவா வெற்றியைத் தொடர்ந்து பூக்களை பறிக்காதீர்கள், மந்திரப் புன்னகை,உயிரே உனக்காக, நிலவே மலரே, அன்புள்ள அப்பா போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழி படங்களிலும் நடித்து உச்சத்தில் இருந்தார் நதியா.

நதியா பெயருக்கு கிராக்கி
நதியான அப்படி ஒரு க்ரஷ் இருந்தது அவரது ரசிகர்களுக்கு, இதனால் பல நிறுவனங்கள் நதியாவின் பெயரில் பொருட்களை விளம்பரப்படுத்தத் தொடங்கின. நதியா மூக்குத்தி, நதியா ட்ரெஸ், நதியா வளையல், நதியா புடவை , நதியா செருப்பு என அந்த காலத்தில் எது எடுத்தாலும் நதியா தான் அந்த அளவுக்கு நதியாவுக்கு ஏகப்பட்ட கிராக்கி.

ரீ எண்ட்ரி
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களிலிருந்து ஒதுக்கி இருந்த நதியா நீண்ட இடைவெளிக்குப்பிறகு எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்து ரீ எண்ட்ரி கொடுத்தார். மேலும் விஷாலுடன் தாமிரபரணி திரைப்படத்தில் பிடிவாதமான அத்தையாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

தெலுங்கு ரீமேக்கில்
மலையாளத்தில் பிளாக் பாஸ்டர் ஹிட்டடித்த த்ரிஷ்யம் திரைப்படத்தின தெலுங்கு ரீமேக்கில் கீதா பிரபாகர் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், த்ரிஷ்யம் 2 திரைப்படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நதியா நடித்து வருகிறார். இதில், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ்குமார் மற்றும் சுரேஷ் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளது.

இளமையின் ரகசியம் இது தானா
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நதியா இளமை மாறாமல் அப்படியே கட்டுக்கோப்பாக இருக்கிறார். பூவே பூச்சூடவா படத்தில் பார்த்த அதே அழகுடன் திரையில் இன்று வரை மின்னுகிறார். நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், யோகா தினத்தை முன்னிட்டு யோகா சனம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒற்றைக்காலில் நின்று அசால் ட்டாக யோகாசனம் செய்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் உங்கள் இளமைக்கு காரணம் இதுதானா என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











