Nalini: கனவில் வந்த கருமாரி.. ராமராஜன் மாஜி மனைவி திருவேற்காட்டுல என்ன பண்றாரு பாருங்க!

சென்னை: 80 கால கட்டத்தில் கொடி கட்டிப்பறந்த நடிகை நளினி தற்போதும் சீரியல் , சினிமா என இரண்டிலும் நடித்து வருகிறார். தீவிர அம்மன் பக்தையான நளினி, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் மடிப்பிச்சை எடுத்து வேண்டுதலை நிவர்த்தி செய்து, மனம் உருகி அம்மனை வணங்கினார்.

ராணுவ வீரன் படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்து தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய நளினி, உயிருள்ள வரை உஷா, நூறாவது நாள், 24 மணி நேரம், அலை ஓசை என பல வெற்றிப்படத்தில் நடித்துள்ளார். இவர் அடுத்தடுத்து படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போது, நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்த நிலையில், நளினிக்கும் ராமராஜனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். திருமணத்திற்கு பின் நடிக்காமல் இருந்த நளினி மீண்டும், சீரியலில் என்ட்ரி கொடுத்து, தற்போது சினிமா, சீரியல் என இரண்டிலும் நடித்து வருகிறார்.

Nalini Amman temple
Photo Credit:

நடிகை நளினி: அதிக தெய்வ நம்பிக்கை கொண்ட நடிகை நளினி, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் மடிப்பிச்சை எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். இதையடுத்து பேசிய நளினி, அம்மன் என் கனவில் தோன்றி, எனக்கு என்ன செய்ய போகிறாய் என்று கேட்டது. இஷ்ட தெய்வம் கனவில் வந்து என்ன செய்வ என்று கேட்டதால், ஏதாவது செய்ய வேண்டும் என்று, அதே கோவில் வாசலில் மடிப்பிச்சை எடுப்பதாக கூறினேன். அதனால், இன்று வேண்டுதலை நிறைவேற்ற வந்துள்ளேன் என்றார். திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் காலை 6 மணி முதல் மாலை வரை மடிப்பிச்சை எடுத்தாக அவர் கூறினார். அம்மனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் இதை உடனே செய்தேன்.. மடிப்பிச்சை போடுங்கள் நான் அம்மனுக்கு செலுத்துகிறேன் என்று பேட்டியில் தெரிவித்தோடு, விரைவில் அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாகவும் கூறினார்.

அம்மனின் அருள்: அண்மையில், ஆன்மீக சங்கமம் 2025 என்ற நிகழ்ச்சியில் பேசிய நளினி, என்னுடைய 12வது வயதில் என் உடம்பு முழுக்க புண்ணாக சிரங்காக இருக்கும். அப்போது பலரும் இந்தப் பெண் தாங்காது, அவ்வளவுதான் என்று சொன்னார்கள். அப்போது என் அம்மா சிவாச்சாரியார் ஒருவரிடம் அழைத்து சென்றார். அந்த சிவாச்சாரியார் என்னை, பார்த்துவிட்டு, இன்று இந்த பெண்ணை யாரெல்லாம் ஒதுக்குகிறார்களோ அவர்களெல்லாம் நாளைக்கு இந்த பெண்ணை கொண்டாடக் கூடிய அளவிற்கு, இந்த குடும்பத்தையே தலை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த பெண் உங்களை வாழ வைப்பார் என்று சொன்னார்.

கருமாரி அம்மன் துணை: அந்த நேரத்தில் சிவாச்சாரியார் சொன்னதை யாரும் நம்பவில்லை, என் அம்மா மாரி அம்மனிடம் மண்டியிட்டு, வேப்பிலையில் போட்டு கதறி அழுது குணமாக வேண்டும் என வேண்டிக்கொண்டார்கள். அப்போது, அம்மன் தான் எனக்கு உயிர் கொடுத்து காப்பாற்றினார். என் 13 வயதிற்கு பிறகு என் நிலைமை மாறியது. 14 வயதில் நான் நடிக்க ஆரம்பித்தேன். இன்று வரையிலும் என்னுடன் என் கருமாரி துணை இருக்கிறாள். நான் எப்போது அழைத்தாலும் அந்த நொடியே கருமாரி அம்மன் என் முன் தோன்றுவாள். இது நல்லது, இது கெட்டது, இதை செய், இதை செய்யாதே என்று என்னை என் அம்மன் உடனிருந்து வழிகாட்டி கொண்டே இருக்கிறாள் என்று பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X