கென்யாவில் காண்டாமிருகக்குட்டிக்கு ‘என் சுவாசக் காற்றே’ நடிகை பெயர்!
பாலிவுட் நடிகையான தியா மிர்ஸாவின் பெயர் கென்ய காண்டாமிருகக்குட்டிக்கு வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: பிரபல பாலிவுட் நடிகையான தியா மிர்ஸாவின் பெயரை, கென்யாவில் புதிதாகப் பிறந்துள்ள காண்டாமிருகத்திற்கு சூட்டியுள்ளனர்.
தமிழில் என் சுவாசக் காற்றே படத்தில் குரூப் டான்சர்களில் ஒருவராக சினிமாவில் அறிமுகமானவர் தியா மிர்ஸா. 2000ம் ஆண்டு மிஸ் ஆசியா பசிபிக் டைட்டிலை வென்ற இவர், பாலிவுட்டில் தற்போது பிரபல நடிகைகளுள் ஒருவராக உள்ளார். டஸ், லேஜ் ரஜோ முன்னாபாய், கிரேஸி 4 ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமின்றி சமூக சேவையிலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும் தியா, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் நல்லெண்ணத் தூதுவராகவும், இந்திய வனவிலங்குகள் நல ட்ரஸ்டின் தூதுவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், தியாவின் வனவிலங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கவுரவிக்கும் வகையில், கென்யாவில் புதிதாக பிறந்துள்ள காண்டாமிருகக் குட்டிக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதனை தியா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர், 'அழகிய அந்தக் குட்டிக்கு எனது பெயரை வைத்ததற்கு நன்றி. அந்த தியாவுடன் புகைப்படம் எடுத்து என்னையும் அதில் டேக் செய்யுங்கள்' என சில நண்பர்களின் பெயரை அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











