ஆறடி நமீதாவின், அரையடி 'சாக்லேட்' மச்சான்...!!
சென்னை: நடிகை நமீதாவின் , புது செல்லம் அரை அடி உயர ஆஸ்திரேலிய நாய்க்குட்டியாம். ரொம்ப ஸ்வீட்டா, இந்த செல்ல நாய்க்குட்டிக்கு, 'சாக்லெட்' என்று அவர் பெயர் வச்சுருக்காராம். அதை போகிற இடங்களுக்கு எல்லாம் தூக்கி சென்று கொஞ்சி, மற்றவர்கள் காதில் புகையை வரவழைக்கிறாராம்.
பொதுவாகவே, நமீதா செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர். குறிப்பாக, நாய்கள் என்றால் அவருக்கு கொள்ளைப்பிரியம்.
ஏற்கனவே அவர் வீட்டில், 'புல் டாக்' என்ற இனத்தை சேர்ந்த ஒரு பெரிய நாயை வளர்த்து வருகிறார். பாதுகாவலர் மாதிரி அந்த நாய், நமீதா வீட்டை காவல் காத்து வருகிறது.

நமீதா வீட்டின் புதுவரவு...
நமீதா வீட்டில் புதுவரவாக ½ அடி உயரமே உள்ள சிட்சு' இனத்தை சேர்ந்த ஒரு வெளிநாட்டு நாய்க்குட்டியை வலம் வருகிறது. அது ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குட்டியாம்.

சாக்லேட்டுக்கும் நமீதாவ ரொம்ப பிடிக்குமாம்....
பிறந்து 6 வாரங்களே ஆன அந்த நாய்க்குட்டி, நமீதாவிடம் மிக பிரியமாக பழகுகிறது. நன்றாக விளையாடுகிறது.

சாக்லேட்... சாக்லேட்...
இந்த நாய்க்குட்டிக்கு நமீதா, ‘சாக்லெட்' என்று செல்லமாக பெயர் சூட்டியிருக்கிறார்.

இது என் நீண்ட கால ஆசை...
இது பற்றி நமீதா கூறும்போது, ‘‘போகிற இடங்களுக்கு எல்லாம் தூக்கி செல்கிற மாதிரி ஒரு நாய்க்குட்டி வாங்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அது, இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது.

கையடக்கமானதாம்...
இந்த நாய்க்குட்டி, ½ அடி உயரத்துக்கு மேல் வளராது. கூடையில் வைத்தோ அல்லது பையில் வைத்தோ சுலபமாக தூக்கி செல்ல முடியும். இன்னும் இரண்டு நாட்களில் ‘சாக்லெட்,' எங்க சொந்த ஊரான சூரத்துக்கு என்னுடன் வர இருக்கிறான்'' என்கிறார்.

'இவரு' மாதிரிதான் அவரு இருப்பாரு...!
நமீதாவின் புத்தம் புது 'சாக்லே'ட் மச்சான் படத்தை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே அவரது 'சகா' ஒருவரின் படம்தான் கிடைத்தது. இவரு மாதிரிதான் அவரும் இருப்பாராம்...!


Click it and Unblock the Notifications











