Namita: தமிழ் ரசிகர்களை ஆட்டிப்படைத்த நடிகை நமீதா..இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

சென்னை : ஹாய் மச்சான்ஸ் என்று இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நமீதா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

சினிமாவில் நுழைந்து டாப் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால், கொஞ்சம் அழகு, ஓவர் கவர்ச்சி காட்ட வேண்டும். அப்படி தனது அழகாலும், அதீத கவர்ச்சியாலும் இளசுகளை ஜொள்ளு விடவைத்து ஏக்க பெருமூச்சுவிட வைத்தவர் நடிகை நமீதா.

Actress Namita weight loss transformation photos trending on social media

கொழுக்கு மொழுக் என்று திரையில், நமீதா வரும் சில காட்சிகளை பார்த்தால் மட்டும் போதும் என்று ஏங்கிக்கிடந்தன சில இள வட்டங்கள்.

நடிகை நமீதா : 2004-ம் ஆண்டு வெளியான அண்ணா படத்தின் ஊசி உடையோடு ஓவர் கவர்ச்சி காட்டாமல் நடித்த நமீதா, ஏய் படத்தில், தண்ணீருக்குள் இறங்கி ''அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா'' என பாட்டில் மொத்த கவர்ச்சியை எறக்கிவைத்தார். அந்த பாட்டில் சரத்குமாரின் தவத்தை கலைத்து ஆட்டம் போட்ட நமீதா அன்றியிலிருந்து இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே மாறிவிட்டார்.

அடையாளம் தெரியாமல் : ஹாய் மச்சான்ஸ் என்று இளசுகளை செல்லமாக அழைத்து வந்த நமீதா, விஜய், அஜித்,சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து டாப் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில், உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா பல பேட்டிகளில் கூறியிருந்தார்.

Actress Namita weight loss transformation photos trending on social media

பிக் பாஸ் நிகழ்ச்சியில் : ஓவர் குண்டானதால் பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரையில் கலா மாஸ்டரின் மானாட மயிலாட டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். அதன்பின், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் வந்தார். இந்த நிகழ்ச்சியில் இவரை பார்ப்பதற்காகவே ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியை ரசித்து ரசித்து பார்த்தனர். நமீதாவால், அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கும் எகிறியது.

Actress Namita weight loss transformation photos trending on social media

இரட்டைக்குழந்தைகள் : அதன் ஆளே காணாமல் போன நமீதா வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நமீதாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணரின் தீவிர பக்தையான நமீதா தனது மகன்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என கிருஷ்ணாரின் பெயர் வைத்துள்ளார்.

Actress Namita weight loss transformation photos trending on social media

எப்படி இருக்கிறார் தெரியுமா : குழந்தை பிறப்புக்கு பிறகு குழந்தை குட்டி என்று வெளியில் தலைகாட்டாமல் இருந்த நமீதா, தற்போது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோவில் சிவப்பு உடையில், பெரிய கம்பல் அணிந்து கொண்டு சும்மா அம்சமாக இருக்கிறார். ஏற்கனவே உடல் எடை அதிகரித்து காணப்பட்ட நமீதா, குழந்தை பிறப்புக்கு பின் எடை கூடியிருப்பார் என்று பார்த்தால், முன்பை விட,முகத்தில் அந்த பளபளப்பு குறையாமல் சும்மா நச்சுனு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் மீண்டும் நடிக்க வாங்க என்று அவரிடம் கெஞ்சி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X