'பெண்களை மதிக்க கத்துக்குங்க' தரக்குறைவாகப் பேசிய இளைஞர்..போட்டோ வெளியிட்டு விளாசித் தள்ளிய நமீதா!
சென்னை: தன்னைப் பற்றி தரக்குறைவாகப் பேசியவரின் புகைப்படத்தை வெளியிட்டு விளாசித் தள்ளி இருக்கிறார், நடிகை நமீதா.
Recommended Video
தமிழில் எங்கள் அண்ணா, ஏய், பம்பரக் கண்ணாலே, பில்லா உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை நமீதா.
தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர், 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம்
பின்னர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நமீதா, இப்போது ஸ்ரீமகேஷ் இயக்கும் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை நமீதாவை சமூக வலைத்தளப் பக்கத்தில் இளைஞர் ஒருவர் தரக்குறைவாகப் பேசியுள்ளார். அவரது போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நடிகை நமீதா, விளாசித் தள்ளி உள்ளார். இது வைரலாகி வருகிறது.

ஆபாச படம்
அவர் அதில் கூறியிருப்பதாவது: புகைப்படத்தில் இருக்கும், தமிழ் செந்தமிழ் என்ற இந்த நபர், என் இன்ஸ்டாகிராமில் 'ஹாய் ஐட்டம்' என்று அழைத்தார். கேட்டபோது, தன்னுடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகச் சொன்னார். தொடர்ந்து பேசிய போது, என் ஆபாச படத்தை பார்த்ததாகவும் அதை இணையதளத்தில் வெளியிடப் போவதாகவும் சொன்னார். அப்படியே செய் என்று சொல்லிவிட்டேன். இதுதான் அவர் முகம்.

கிளாமர் இன்டஸ்ட்ரி
இதுபோன்ற மலிவான எண்ணம் கொண்ட நபர்கள், ஒரு பெண்ணை எப்படி வேண்டுமானாலும் கேவலமாக அழைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஏன் இதையெல்லாம் கேட்க வேண்டும்? நான் மீடியாவில் இருக்கிறேன் எனபதாலா? இல்லை கிளாமர் இன்டஸ்ட்ரியில் இருக்கிறேன் எனபதன் காரணமாகவா? என் அமைதியை பலவீனம் என்று தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.

பெண்களை மதிக்க
உண்மையான மனிதனுக்கு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என்பது தெரியும். பெற்ற தாயை அவமதித்தால் அதை இவர் ஏற்றுக் கொள்வாரா? துர்க்கா பண்டிகையை கொண்டாடுவதற்கு பதிலாக, மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கு பதிலாக, பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள். அது தான் முக்கியமானது' என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை நமீதாவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











