குடும்பத்துடன் புது வீட்டுக்குச் சென்ற பிரபல நடிகை! ஓடி வந்து வாழ்த்துச் சொன்ன சக ஹீரோயின்ஸ்!
கொச்சி: புதிய வீட்டுக்கு குடி பெயர்ந்துள்ள பிரபல நடிகை அதுபற்றிய புகைப்படங்களை சமுக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
தமிழில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்த நிமிர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நமீதா பிரமோத்.
பிரியதர்ஷன் இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு முன், என் காதல் புதிது என்ற படத்தில் நடித்திருந்தார்.

புரொபசர் தின்கன்
மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டிராபிக், புதிய தீரங்கள், அமர் அக்பர் அந்தோணி, ரோல் மாடல்ஸ், அம்மார சம்பவம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது, திலீப் ஹீரோவாக நடிக்கும் புரொபசர் தின்கன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தெலுங்கு சினிமாவிலும் நடித்து வரும் நமீதா பிரமோத், மலையாள சீரியல்களில் நடித்திருக்கிறார்.

சமூக வலைதளங்கள்
லாக்டவுன் காரணமாக சமூக வலைத்தளங்களில் தங்கள் நேரத்தை அதிகமாகச் செலவழித்து வருகின்றனர் பல நடிகைகள். தங்களது எக்சர்சைஸ், நடனம், சமையல் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக்ஸ்களை குவிக்கின்றனர்.

நடிகை நமீதா பிரமோத்
அடிக்கடி புகைப்படங்களை பதிவிடும் நடிகைகளில் ஒருவர், நடிகை நமீதா பிரமோத். அவர் இப்போது, தங்களது குடும்பம் புதிய வீட்டுக்கு குடிபெயர்ந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 'அதிக பாசம், கனவுகள், அமைதி மற்றும் நினைவுகளுடன் புதிய வீட்டுக்குச் சென்றுள்ளோம். உங்கள் பிரார்த்தனைகளில் எங்களையும் வைத்திருங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

நிகிலா விமல்
வீட்டுக்குள் சில பகுதிகளையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். சக நடிகைகளான அனுஶ்ரீ, பாமா, நிகிலா விமல், ரிமிடோமி, அனு சித்தாரா, அபர்ணா நாயர், பானு, பிரியங்கா நாயர் உட்பட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் நமீதா பிரமோத். ஏராளமான ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











