கவலையும் இல்ல.. மன அழுத்தமும் இல்ல.. மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா!

சென்னை: ஹாய் மச்சான்ஸ் என்று அழகு கொஞ்சும் மொழியில் இளசுகளின் மனதை கொள்ளையடித்தவர் நமீதா. உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் மாறிய நடிகை நமீதா வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேனு சொல்லு என்பது போல, உடல் எடையை குறைத்து வெள்ளித்திரையில் மீண்டும் ரீ என்ட்ரியாகி உள்ளார்.

சொந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழில் விஜயகாந்த், பிரபுதேவா நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை அடுத்து, மகா நடிகன், இங்கிலீஸ்காரன், அஜித்துடன் பில்லா, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

Actress Namitha re entry in dance jodi dance reloaded show in zee tamil

நடிகை நமீதா: தமிழே அழகான மொழி, அதுவும் நமீதா வாயில் இருந்து கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழை கேட்கவே தனி இளசுகள் கூட்டம் நமீதா பின்னால் சுற்றிக்கொண்டு இருந்தது. அழகிய தமிழ் மகன், பில்லா, நான் அவன் இல்லை படங்களில் சிக்குனு இருந்த நமீதா, ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார்.

மன அழுத்தம் தான் காரணம்: மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா பல பேட்டியில் கூறியிருந்தார். உடல் எடை அதிகரித்த நமீதாவிற்கு அதன் பிறகு படவாய்ப்பு குறைந்து போனது. இதையடுத்து, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார். அதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரால் தாக்கு பிடிக்க முடியாததால், 28 நாட்களிலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட்டாகி வெளியேறினார்.

இதையடுத்து, 2017 ஆம் ஆண்டு நடிகை நமீதா வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. தனது மகன்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயர் வைத்துள்ளார். குழந்தை பிறந்ததை அடுத்து நீண்டநாட்கள் வெளியில் வராமல் இருந்த நமீதா, அவ்வப்போது பாஜக அரசியல் நிகழ்ச்சியில் மட்டும் தலைகாட்டினார்.

மாஸ் ரீ என்ட்ரி: உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டாக காணப்பட்ட நமீதா, தற்போது சிக்குனு உடல் எடையை குறைத்து அட்டகாசமாக மாறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் ஷோவில் நடுவராக களமிறங்கியுள்ளார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோக்களும் வெளியாகி நமீதா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் சினேகா, சங்கீதா, மாஸ்டர் பாபா பாஸ்கர் நடுவராக இருந்தார்கள். இதில் பாபா பாஸ்கர் மாஸ்டருக்கு பதிலாக நமீதா நடுவராகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X