அட நம்ம நமீதாவா இது.. திரும்பவும் ‘பழைய பன்னீர்செல்வமா’ திரும்பி வந்துட்டாங்களே.. மச்சான்ஸ் ஹேப்பி!

நமீதாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Recommended Video

Namitha New Look | Pottu | Bigg Boss | Namitha

சென்னை: உடல் எடையைக் குறைத்து மீண்டும் அறிமுகமான சமயத்தில் இருந்தது போன்ற தோற்றத்தில் நமீதா மாறியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. அப்போது சரியான எடையுடன் அழகாக இருந்த அவர், அடுத்தடுத்த படங்களில் அதிக எடை போட்டு விட்டார்.

அஜித்துடன் பில்லா, விஜய், சத்யராஜ் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்தவர், பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். கவர்ச்சி புயலாக வலம் வந்த இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

காதல் திருமணம்

கடந்த 2017ம் ஆண்டு தனது காதலரான வீரேந்திர சௌத்ரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் நமீதா, கடினமான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்துள்ளார். அவ்வப்போது தனது புதிய புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அலங்காரம்

அந்தவகையில் தற்போது மணப்பெண் போன்ற அலங்காரத்தில் நமீதா இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் உடல் எடையை மேலும் குறைத்து, தனது அறிமுக நாட்களில் இருந்தது போன்று நமீதா இருக்கிறார்.

புதிய படவாய்ப்புகள்

நமீதாவின் இந்த புதிய தோற்றத்தால் அவரது ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவரது இந்த அழகிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. நிச்சயம் இதைப் பார்க்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் நமீதாவை தங்களது புதிய படத்தில் ஒப்பந்தம் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

அகம்பாவம் படம்

அகம்பாவம் படம்

நமீதா தற்போது அகம்பாவம் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் துணிச்சலான பத்திரிகையாளராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நமீதா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X