ஹலோ மச்சான்ஸ்..கொஞ்சும் தமிழில்..நமீதா வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

சென்னை : நீண்ட நாட்களுக்கு பின் வீடியோவில் பேசி அசத்தியுள்ளார் நமீதா.
ஹலோ மச்சான்ஸ்! எங்கேயோ கேட்ட குரல் போல் உள்ளதே என்று பார்த்தால் நம் இளம் வயதை வசீகரம் செய்த நமீதா.

கவர்ச்சிக்கு மயங்காத ரசிகர்கள் ஏது? முன்னணி நடிகைகளுக்கு ஈடாக திரைப்படங்கள் எதுவும் நடிக்காத காலத்திலும் நமீதாவிற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. நீண்ட நாட்களாக திரையில் தோன்றாத நமீதா, தற்போது, கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு, தன் முகத்தை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

Actress Namitha shared corona awareness video

அந்த வீடியோவில் வழக்கம் போல மச்சான்ஸ் என்று ஆரம்பித்து "எவ்வளவு நாள் தான் இப்படியே இருப்பது?" என்று கேள்வி கேட்டு பின், நம்மிடமே பதில் உள்ளது எனவும் கொஞ்சும் தமிழில் அழகாக பேசி உள்ளார்.

"வீட்டிலே இருங்கள்!" என்றும் அதுதான் குடும்பத்திற்கு நல்லது எனவும் வெளியே செல்லும் அவசியம் வந்தால், கையில் க்ளாஸ், மாஸ்க் அணிந்து செல்லுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார். வீடியோ முடிவில் நம்ம பாதுகாப்பு நம்மிடம்தான் உள்ளது மச்சான்ஸ்! என வசீகர குரலில் முடித்துள்ளார்.

Actress Namitha shared corona awareness video

பல பிரபலங்கள் வீடியோ வெளியிட்டாலும் திரையுலகிற்கு வந்து குறுகிய காலத்திலேயே பல இளைஞர்களின் கனவில் சடுகுடு ஆடிய நமீதாவின் வீடியோ வெளியாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிங்க் நிற குர்த்தியில் கொஞ்சும் தமிழில் அழகாக தனது விழிப்புணர்வை கூறியுள்ளார் நமீதா.

Actress Namitha shared corona awareness video

நமீதா மீண்டும் திரையில் எப்பொழுது வருவார் என்ற எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தாலும், அடேங்கப்பா நமீதாவ பார்த்து எவ்வளவு நாளாச்சு என்று ஏக்கா பெருமூச்சுவிட்டுள்ளனர் நமீதா ரசிகர்கள். இவர் நடிக்காவிட்டாலும் பரவால இது போன்ற வீடியோக்களையாவது அவ்வப்போது வெளியிட்டால் நல்ல இருக்கும் என்று கருத்து கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X