இயற்கை உணவுகளால் 25 கிலோவைக் குறைத்து சிக்கென்று மாறிய நமீதா!

By Shankar

இயற்கை உணவுகள் துணையுடன் 25 கிலோ எடை குறைத்து சிக்கென்று மாறியுள்ளார் நடிகை நமீதா.

இதனால் சினிமாவில் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர முடிவு செய்துள்ளாராம்.

இளைஞன்

இளைஞன்

கவர்ச்சி கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்த நமீதா, 2010 - ல் வெளியான இளைஞன் படத்தில் வில்லியாக வந்தார். அந்தப் படத்துக்குப் பிறகு அவர் தமிழில் வேறு படங்களில் நடிக்கவில்லை.

எடை கூடியதால்...

எடை கூடியதால்...

உடம்பு குண்டானதால் கதாநாயகி வாய்ப்பு வரவில்லை. எடையை குறைத்து மீண்டும் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறி வந்தார். கடந்த சில மாதங்களாக கடும் உடற் பயிற்சிகள், உணவு கட்டுப்பாடு போன்றவற்றில் ஈடுபட்டார்.

25 கிலோ

25 கிலோ

அதற்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. 25 கிலோ எடை குறைந்து, இன்னும் சிக்கென்ற தோற்றத்தில் காட்சி தொடர்கிறார்.

இயற்கை உணவுகள்

இயற்கை உணவுகள்

தான் இந்த அளவு மெலிந்ததற்கு, இயற்கை உணவுகள்தான் காரணம் என்று அறிவித்துள்ளார் நமீதா.

மலையாளத்தில்...

மலையாளத்தில்...

இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. முதல் கட்டமாக மலையாளப் படமொன்றில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் ரிலீசானதும் தமிழ், தெலுங்கில் நிறைய நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

அரசியல் ஆசை

அரசியல் ஆசை

இத்தோடு நிற்காமல், அரசியலில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார். எந்த கட்சியில் சேர்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வரும் அவர், நிச்சயம் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அவர் அரசியல் முடிவை அறிவிக்கப் போகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X