பில்லா படத்தில் நயன்தாராவுடன் நடித்தேன்.. அவர் என்னிடம் பேசியது இல்ல..நமீதா சொன்ன காரணம்!
சென்னை: ஹாய் மச்சான்ஸ் என்று இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை நமீதா. தனது அழகாலும், அதீத கவர்ச்சியாலும் இளசுகளை ஜொள்ளு விடவைத்து ஏக்க பெருமூச்சுவிட வைத்த நமீதா தற்போது அஜித் நடித்த பில்லா படத்தின் அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
2004-ம் ஆண்டு வெளியான அண்ணா படத்தின் ஊசி உடையோடு ஓவர் கவர்ச்சி காட்டாமல் நடித்த நமீதா, ஏய் படத்தில், தண்ணீருக்குள் இறங்கி ''அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா'' என்ற ஒரே பாட்டில் மொத்த கவர்ச்சியை இறக்கி வைத்தார். அந்த பாட்டில் சரத்குமாரின் தவத்தை கலைத்து ஆட்டம் போட்ட நமீதா அன்றிலிருந்து இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே மாறிவிட்டார். ஹாய் மச்சான்ஸ் என்று இளசுகளை செல்லமாக அழைத்து வந்த நமீதா, விஜய், அஜித், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து டாப் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

நடிகை நமீதா: படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நமீதா, திடீரென உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தனது உடல் அவ்வாறு மாறியதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஓவர் குண்டானதால் பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து, சின்னத்திரையில் கலா மாஸ்டரின் மானாட மயிலாட டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். அதன்பின், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் இவரை பார்ப்பதற்காகவே ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியை ரசித்து ரசித்து பார்த்தனர். நமீதாவால், அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கும் எகிறியது என்று சொல்லலாம்.
இரட்டை குழந்தைகள்: அதன் பின் ஆளே காணாமல் போன நமீதா வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பிறகு குழந்தை குட்டி என்று வெளியில் தலைகாட்டாமல் இருந்த நமீதா, அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
பேசியதே இல்லை: இந்நிலையில், பில்லா படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பில்லா படத்தில் நானும் நயன்தாராவும் சேர்ந்துதான் நடித்தோம். இருந்தாலும் நயன்தாராவுடன் பேசியது குறைவுதான், மற்ற நடிகர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் யாரிடமும் பேசுவதில்லை. எனது காட்சிகளில் நான் நடிப்பேன். அவர் காட்சியில் அவர் நடிப்பார். நாங்கள் ஒன்றாக சேர்ந்து நடித்த காட்சியில் கூட இருவரும் பேசிக் கொண்டதில்லை. பேசாமல் இருப்பது தான் நமீதா அணுகுமுறை என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால் உண்மையில் நான் ஒதுக்கப்பட்டு இருந்தேன். இதனால், படப்பிடிப்பு முடிந்ததும் புத்தகங்களைப் படிப்பேன்.
காரணம் இதுதான்: மேலும், பில்லா படத்தில் நான் நடித்த நிறைய காட்சிகள் படத்தில் இடம் பெறவே இல்லை. படத்தை பார்த்துவிட்டு வருத்தப்பட்டேன். அந்த படத்தின் ஒரு காட்சியில் பாலத்தின் மேல் அஜித் நின்று கொண்டு இருப்பார். அந்த ஒரு காட்சி படத்திற்கு முக்கியமான காட்சியாகும். அந்த காட்சியில் எனக்கு எந்த வசனமும் இல்லை உங்கள் கண்கள் தான் பேச வேண்டும் என்று இயக்குனர் கூறி இருந்தார் என்று நமீதா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











