அட என்ன டிரஸ் இது.. கோழிக்குஞ்சு மாதிரி.. பட் நல்லாதான் இருக்கு!

ஹைதராபாத் : பிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராய் கோழிக்குஞ்சு டிரஸ்ஸில் அட்டகாசமான போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கயல் சந்திரன் நடிப்பில் வெளியான கிரகணம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இவர் அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கவர்ச்சி அலையை வீசி வரும் இவர் இப்பொழுது வித்தியாசமான கோழிக்குஞ்சு டிரஸ்ஸில் உள்ள புகைப்படங்கள் இளைஞர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும்

நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும்

தெலுங்கு சினிமாவில் எக்கச்சக்கமான புதுமுக நடிகைகள் அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்க 2011ஆம் ஆண்டு வெளியான 040 திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை நந்தினி ராய். அதற்கு முன் ஹிந்தியில் வெளியான ஃபேமிலி பேக் திரைப்படத்தில் வந்து செல்வார். இதற்கிடையில் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும் காட்டி மிகப் பிரபலமான நடிகையாக உள்ளார்.

தோல்வி

தோல்வி

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்துள்ள இவர் பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் கயல் சந்திரன் நடிப்பில் வெளியான கிரகணம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கும் அறிமுகமானார். ஆனால் முதல் படமே தோல்வியாக அமைய அதன்பிறகு தமிழில் எந்த ஒரு படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை.

பிக் பாஸ்

பிக் பாஸ்

இயக்குனர் எழில் இயக்கத்தில் தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற வேலைன்னு வந்துட்ட வெள்ளக்காரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் சில்லி பெல்லோஸ், அல்லாரி நரேஷ் கதாநாயகனாக நடித்திருக்க அதில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கொள்ளை கொண்ட இவர் சிவரஞ்சனி, லால்பாக் உள்ளிட்ட அடுத்தடுத்த திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வர பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கியுள்ளார்.

கோழிக்குஞ்சு மாதிரி

கோழிக்குஞ்சு மாதிரி

விரைவில் தென் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வர இருக்கும் நந்தினி ராய் அதற்காக தீவிரமாக போட்டோ ஷூட்டில் இறங்கியிருக்க அடிக்கடி ஒரு வெளிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி கவனத்தைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்பொழுது கோழிக்குஞ்சு மாதிரி வித்தியாசமான காஸ்ட்யூமில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜிகு ஜிகு உடையில் முன்னழகை காட்டிக்கொண்டு பந்து பூ போல குட்டியூண்டு ட்ரெஸ்ஸில் கொள்ளை அழகுடன் பார்க்க அழகான கோழி குஞ்சு மாதிரியே இருக்கும் நந்தினியின் இந்த க்யூட்டான போட்டோஷுட் புகைப்படங்கள் அனைவரையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X