ஜம்முனு கம்முனு கும்முன்னு... நடிகை நந்திதா வெளியிட்ட ஸ்டன்னிங் போட்டோஸ்!
சென்னை : தமிழில் முண்டாசுப்பட்டி அட்டகத்தி போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமான நந்திதா தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
தான் நடிக்கும் கதாபாத்திரங்களை அனைவரும் ரசிக்கும் வகையில் தேர்ந்தெடுத்து அதில் நடித்து வரும் நந்திதா தற்போது ஐபிசி 376 என்ற படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார்.
பார்க்க லட்சணமாக முகத்துடன் பல மொழிகளை பேசத்தெரிந்த இவர் பல்வேறு படங்களில் நடித்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது பதிவிட்டுள்ள ஸ்டன்னிங் போட்டோஸ் வேற லெவல் வைரலாகி வருகிறது.

லட்சணமான முகமும்
தான் நடிக்கும் படங்களில் சிறப்பான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களை பல ஆண்டுக்கு நினைவில் வைத்துக்கொண்டு பேசவைக்கும் வேடங்களை மட்டுமே ஏற்று நடித்து வரும் நந்திதா ஸ்வேதா அதீத அழகும் லட்சணமான முகமும் கொண்டு பல்வேறு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

பூர்ணிமா கதாபாத்திரத்தின்
பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நந்திதா அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். எனவே தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் இவர் தமிழ் திரைத்துறைக்கு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் பூர்ணிமா என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.

குமுதா கதாபாத்திரம்
பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல அனைவரிடத்திலும் தோன்ற வைக்கும் நந்திதா தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் கதாபாத்திரங்களையும் அதை தேர்ந்தெடுக்கும் விதங்களையும் தனக்கே உரித்தான கதைகளை தேர்ந்தெடுத்து கவர்ச்சியில் ஈடுபடாமல் குடும்பபாங்கான கதைகளை இதுவரை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இணைந்து குமுதா என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்து இன்றுவரை குமுதா கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டு வருகிறது.

தளபதி விஜய் நடித்த
இவர் தமிழில் நடித்த முதல் படமான அட்டகத்தி படத்திலேயே பலரையும் கவர்ந்த இவர் அதைத்தொடர்ந்து நடித்த எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். இந்நிலையில் தளபதி விஜய் நடித்த ஃபேன்டஸி கலந்த வரலாற்றுத் திரைப்படமான புலி படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றி தனது சிறப்பான நடிப்பை அனைவரும் போற்றும் வகையில் வெளிப்படுத்தி இருப்பார்.

அதேசமயம் சிபி சத்யராஜ்
இவ்வாறு தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நந்திதா தற்பொழுது ஐபிசி 376 என்ற திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்ட உள்ளார். அதேசமயம் சிபி சத்யராஜ் உடன் முதன்முதலாக இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒருசேர வெளியாகயிருக்கும் காதம்பரி படமும் இவரது நடிப்பில் வெளியாக உள்ளது.

க்யூட்டான வீடியோக்களையும்
இவ்வாறு பல்வேறு படங்களில் மூலம் நம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த நந்திதா சமூக வலைதளங்களின் வாயிலாகவும் நம் அனைவரையும் மகிழ்ச்சி படுத்த தவறியதில்லை. தொடர்ந்து தனது அழகான புகைப்படங்களையும் க்யூட்டான வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வரும் இவர் அவ்வப்போது லைவ்விலும் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தும் வருகிறார்.

கலக்கலான போஸ்
இவ்வாறு இருக்கும் நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சும்மா ஜம்முனு இருக்கும் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து அனைவரையும் கவர்ந்துள்ளார். ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சிங்கிள் டாப் உடன் கலக்கலாக போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் முற்றிலும் வித்தியாசமாக அனைவரும் ரசிக்கும் வகையில் கவர்ச்சி ஏதும் காட்டாமல் கலக்கலாக வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது அனைவரையும் கவர்ந்து மற்றும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











