துண்டைக்கட்டிக்கொண்டு செல்ஃபி..கதறும் சிங்கிள் பசங்க !
சென்னை : நீண்ட காலமாக நந்திதாவுக்கு திரைப்படங்கள் வெளியாகாமல் இருக்க இப்போது அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வர பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.
சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து அசத்தி இணைந்த நந்திதா செல்வராகவனின் இயக்கத்தில் எஸ். ஜே. சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லையிலும் நடித்துள்ளார்.
அடக்க ஒடுக்கமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது அன்பையும் அள்ளி வந்த நந்திதா இப்பொழுது வரவர கவர்ச்சி ஓவராக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வர இப்பொழுது குளித்து முடித்து வெறும் துண்டோடு பாத்ரூமில் எடுத்த செல்ஃபியை வெளியிட்டுள்ளார்.

குமுதா கதாபாத்திரத்தில்
விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையிலேயே மிக முக்கியமான படங்களில் ஒன்று இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. பல்வேறு கதாபாத்திரங்கள் விஜய்சேதுபதி நடித்து இருந்தாலும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவில் திகட்டாத காமெடியை வழங்கியிருக்க அதில் இவருக்கு ஜோடியாக குமுதா என்ற கதாபாத்திரத்தில் நந்திதா அசத்தியிருந்தார்.

கவர்ச்சி காட்ட தயார்
குமுதா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக இன்று வரை இவரை பலரும் குமுதா என்றே அழைத்து வருகின்றனர். ஒரு கட்டத்திற்கு பிறகு படங்கள் அனைத்தும் தோல்விகளை சந்தித்து வர என்ன செய்வதென்று புரியாமல் இருந்த நந்திதா அதற்காக கவர்ச்சி காட்டுவதில் இறங்கிவிட்டார். புகைப்படங்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நான் கவர்ச்சி காட்ட தயார் எனக் கூறிவரும் நந்திதா அதற்காக எக்கச்சக்கமான கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் மிதக்க விட்டு இருக்கிறார்.

செம குஷியில்
சிம்புவின் ஈஸ்வரன் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்த நந்திதா அதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான கபடதாரி படத்திலும் அனைவரையும் கவர்ந்து இருக்க இதுவரை ரிலீசாகாமல் தேக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து திரைப்படங்களும் ஒன்றாக வெளியாகி வருவதால் நந்திதா செம குஷியில் இருக்கிறாராம்.

செம கிக்காக
இந்த வகையில் இப்பொழுது செல்வராஜன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்க இதிலும் கதாநாயகியாக நந்திதா நடித்திருக்க எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்நிலையில் விழுந்த மார்க்கெட்டை மீண்டும் அடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் இப்பொழுது ஒருபடி மேலே போய் பாத்ரூமில் குளித்து முடித்து வெறும் துண்டுடன் கழுத்து கவர்ச்சி காட்டிக்கொண்டு செம கிக்காக போஸ் கொடுத்திருக்கும் இந்த பாத்ரூம் செல்ஃபி போட்டோ இப்பொழுது ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











