இளசுகளை சூடேத்தும் குமுதா... வேறலெவல் போட்டோஷூட்!
சென்னை : அட்டகத்தி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பிரபலமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை நந்திதா இப்போது ஹாட் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள நந்திதா, சிபிராஜின் சூப்பர் த்ரில்லர் திரைப்படமான கபடதாரி-யில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த இவர் சில திரைப்படங்களில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு வரும் நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலை மறை காய் மறைவாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை கட்டி இழுக்கும் ஹாட் புகைப்படம் சூடேற்றியுள்ளது.

அறிமுக திரைப்படமான
சினிமாவைப் பொருத்த வரையில் அன்று முதல் இன்றுவரை குடும்பப்பாங்கான நடிகைகளுக்கு எப்பொழுதுமே வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் கன்னட திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகை நந்திதா இயக்குனர் பா ரஞ்சித் அறிமுக திரைப்படமான அட்டகத்தியில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டார்.

தேடிக் கொண்டிருக்கிறார்
அட்டகத்தி திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த அடுத்தடுத்த திரைப்படங்கள் தொடர் வெற்றியை கைப்பற்ற முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் இன்றுவரை தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் தேடிக் கொண்டிருக்கிறார்.

போலீஸ் வேடத்தில்
விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப் படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்லும் நந்திதா தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வர கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஐபிசி 376 என்ற திரைப்படத்தில் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்க இப்பொழுது இறுதிகட்ட பணியில் உள்ளது.

குமுதா கதாபாத்திரம்
நந்திதா இதுவரை பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு இணையாக நடிப்பில் அனைவரையும் கவர்ந்து இருந்த இவரது குமுதா கதாபாத்திரம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

இலை மறை காய் மறைவான
தமிழ் திரைப்படங்களை பொறுத்தவரையிலும் நந்திதா இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்த போதிலும், சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் சற்று கவர்ச்சி தூக்கலாகவே இருந்துவர இப்பொழுது முன்னழகு மற்றும் தொடை அழகு தெரிய ஹாட்டான சிங்கிள் பீசில் கன்னத்தில் கை வைத்தவாறு ரசிகர்களை சூடேற்றும் வகையில் வெளியிட்டுள்ள இந்த இலை மறை காய் மறைவான கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











