குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
சென்னை : மிகத் திறமையான நடிகையாக இருந்தும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
கதாநாயகியாக நடித்து வரும் அதே சமயம் ஒரு சில திரைப்படங்களில் இரண்டாம் கதாபாத்திரத்திலும் நடித்து வரும் இவர் சமீபத்தில் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து கலக்கியிருப்பார்.
இதுவரை அடக்க ஒடுக்கமாக கவர்ச்சியில்லாத புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நந்திதா இப்பொழுதும் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவிற்கு இறங்கி கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வர இப்பொழுது படுக்கை அறையில் குப்புறப்படுத்துக் கொண்டு ஏதோ யோசனையில் சோகமாக இருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.

முதல் முறையாக
கன்னடத் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை நந்திதா ஸ்வேதா தமிழில் அறிமுகமாகி மளமளவென பெரிய பெரிய வாய்ப்புகளை குவித்து வந்த இவர் பா. ரஞ்சித்தின் அட்டகத்தி மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார். நடிகர் தினேஷின் எதார்த்தமான நடிப்பில் உருவான அட்டகத்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து நந்திதாவுக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

அச்சடித்த ஆணி போல
சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்ற நந்திதாவுக்கு விஜய்சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அதில் இவரது குமுதா கதாபாத்திரம் இன்று வரை பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. நந்திதா பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா குமுதா என்ற கதாபாத்திரம் மட்டும் அனைவரது மனதிலும் அச்சடித்த ஆணி போல பதிந்தது.

இரண்டாம் கதாநாயகியாக
ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் அனைத்தும் குறைந்து போக கிடைக்கின்ற திரைப்படங்களிளெல்லாம் நடித்து இருக்கும் மார்க்கெட்டும் தவறியது. இந்த நிலையில் இரண்டாம் கதாநாயகியாக இருந்தாலும் பரவாயில்லை என்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருந்தால் நடிக்க தயார் என சொல்லிவரும் நந்திதாவுக்கு சமீபத்தில் சிம்புவின் நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கன்னடத்தில் மாபெரும் வெற்றி
மிகத் திறமையான நடிகை ஆனால் சரியான வாய்ப்புகள் இல்லாததால் முன்னணிக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இவர், இப்பொழுது கபடதாரி என்ற திரைப்படத்தில் நடித்து வர கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்றதை போலவே தமிழிலும் சக்கை போடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோகமாய் படுத்திருக்கும்
எப்பொழுதும் துள்ளிக்குதிக்கும் மான் போல அரை டவுசர் புகைப்படங்களை பதிவிட்டு வந்த நந்திதா இப்பொழுது படுக்கையில் குப்புற படுத்துக்கொண்டு சோகமாக "சண்டையிடு அல்லது விட்டுவிடு, தேர்வு உன்னுடையதே" என கேப்ஷனை போட்டுவிட்டு கருப்பு கலர் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் சோகமாய் படுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன குமுதா என்ன ஆச்சு என அன்போடு விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











