ஆரஞ்சு மிட்டாய் கவுனில் தஞ்சாவூர் பொம்மை போல க்யூட்டாக இருக்கும் நந்திதா ஸ்வேதா!

சென்னை: தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு பிரபலமாக உள்ள நடிகை நந்திதா ஸ்வேதா சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருப்பார்

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை வசியம் செய்தவர் முதல் முறையாக நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நெகட்டிவ் ரோலில் கலக்கியிருப்பார்.

இந்த நிலையில் ஆரஞ்சு மிட்டாய் கலரில் அசத்தலான குட்டி கவுனில் தஞ்சாவூர் பொம்மை போல க்யூட்டாக இருக்கும் நந்திதாவின் அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன

குறைந்த பட்ஜெட்டில்

குறைந்த பட்ஜெட்டில்

அட்ட கத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா முதல் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது மிகவும் யதார்த்தமான கதை களத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அட்டகத்தி கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து நந்திதா ஸ்வேதா துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான எதிர்நீச்சல் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தொடர் வெற்றிகள்

தொடர் வெற்றிகள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல் நந்திதாவுக்கு மற்றுமொரு வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் பெண்ணாக நந்திதா நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது இந்த நிலையில் அடுத்ததாக ராம்குமார் இயக்கத்தில் முண்டாசுப்பட்டி என்ற வித்தியாசமான கதையில் நடித்தார் முண்டாசுப்பட்டி படத்தில் அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து காட்டிய நந்திதாவுக்கு இந்த படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இரண்டாவது கதாநாயகியாக

இரண்டாவது கதாநாயகியாக

இவ்வாறு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த நந்திதா விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணைந்து நடித்த படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. விஜய் சேதுபதியை வைத்து கலகலப்பான காமெடி படமாக இயக்கிய படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவின் நந்திதா குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருப்பார் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் வித்தியாசமாக இருக்க படம் முழுவதும் கலகலப்பான காமெடியில் வெளியானது மேலும் இந்த படத்தில் நந்திதாவின் கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும் பரவியது இன்றுவரை நந்திதாவை குமுதா எனவே ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்

Recommended Video

செல்வராகவன் ஒரு நடிப்பு SCHOOL| ACTRESS NANDITA SWETHA CHAT| FILMIBEAT TAMIL
தஞ்சாவூர் பொம்மை போல

தஞ்சாவூர் பொம்மை போல

இவ்வாறு ஹிட் படங்களை கொடுத்த நந்திதாவுக்கு ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த படங்களில் தோல்விகளை தந்தது இந்த நிலையில் நடிகர் சிம்பு சுசீந்திரன் கூட்டணியில் பொங்கல் தினத்தன்று வெளியான ஈஸ்வரன் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். இப்பொழுது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ரத்தம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தமாகியுள்ளார்.தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா இப்பொழுது ஆரஞ்சுமிட்டாய் கவுனில் அழகிய தஞ்சாவூர் பொம்மை போல அழகாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X