திருப்பதியில் சாமி தரிசனம்.. நந்திதா ஸ்வேதா எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?

சென்னை: குடும்பபாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை நந்திதா ஸ்வேதா. தமிழ், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கியமான நடிகையாக திகழ்ந்து வரும் இவர், திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு, அதிரடியான ஒரு முடிவை அறிவித்துள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷூக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்தப்படம் தான் முதன்முறையாக இவர் அறிமுகமான தமிழ் திரைப்படமாகும். இதையடுத்து, விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

Actress Nandita Swetha Visit Tirupati venkateswara temple

எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா ஆகிய படங்களிலும், தளபதியின் புலி படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிறிது நேரமே அந்த கதாபாத்திரம் வந்தாலும் அந்த கதாபாத்திரம் நின்னு பேசும் அளவுக்கு இருந்தது.

நந்திதா ஸ்வேதா: தமிழில் அறிமுகமாகும்போது பெரும்பான்மையான நடிகைகள் முதலில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர பல்வேறு கவர்ச்சிக்குறிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவது வழக்கம். தற்போது நந்திதாவும் பட வாய்ப்புக்காக கொஞ்சம் ரூட்டு மாறி கொஞ்சம் கவர்ச்சிகாட்டி நடித்தார்.

திருப்பதியில் சுவாமி தரிசனம்: இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நந்திதா ஸ்வேதா, தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். நல்லபடியாக சாமி தரிசனத்தை முடித்து விட்டேன். 2024ம் ஆண்டு தொடங்கி இருக்கிறது. மேலும், ஆந்திராவில் சர்வதேச திரைப்படவிழா நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழாவிற்காகத்தான் இப்போது நான் வந்தேன். தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழியிலும் நான் நல்ல படங்களில் நடித்து வருகிறேன். தற்போது இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். நடிகை நந்திதா விஜய் ஆண்டனி நடித்த ரத்தம் திரைப்படத்தில் செய்தி ஆசிரியராக நடித்திருந்தார்.

மெலிந்த நந்திதா: ரத்தம் திரைப்படத்தில் கொழு கொழு என்று இருந்த நந்திதா தற்போது உடல் மெலிந்து காணப்பட்டார். அவர் பைப்ரோமியால்ஜியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும். இது என் உடல் எடையை கடுமையாக குறைத்துள்ளது. இதனால், ஒரு சிறிய வேலையைக்கூட என்னால் செய்ய முடிவில்லை என்று நந்திதா ஸ்வோதா கூறியிருந்தார்.

நந்திதாவின் அதிரடி முடிவு: நான் விரைவில் ஒரு வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறேன். இனி ஹாரர் திரைப்படங்களை தேர்வு செய்யப் போவதில்லை, தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களும் தொடர்ச்சியாக Horror பட கதைகளையே சொல்லி வருவதால் அதிலிருந்து சற்று வெளியேறி ஜனரஞ்சகமாக கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகை நந்திதா ஸ்வேதா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X