சுண்டி இழுக்கும் நந்திதா.. ரசிகர்களை கவர நியூ ட்ரிக்.. வைரலாகும் போட்டோஸ்!
Recommended Video
சென்னை : நந்திதா புதிய போட்டோசூட்களை பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படத்தில் அறிமுகமானவர்தான் ஸ்வேதா. இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானதால் நந்திதாவை தன் பெயரோடு சேர்த்துக்கொண்டார்.

தமிழில் பா.ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டக்கத்தி படத்தில் நந்திதாவும் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நந்திதா. இவர் இதன் பின் நடித்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் கிடப்பில் உள்ளது.

இவருக்கு தமிழில் ஒரு முழு அங்கீகாரம் கிடைத்து இவரது நடிப்பு மிகவும் பாராட்டபட்ட திரைப்படம் விஜய் சேதுபதி நடித்த இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா. இதில் விஜய் சேதுபதியின் காதலியாக வருவார் அவர்.அந்த படத்தில் விஜய் சேதுபதி செய்யும் சேட்டைகளை பொறுத்து கொண்டு குமுதா ஹாப்பியா இருப்பார். அந்த கதாபாத்திரம் இவருக்கு பொருந்தியது. இன்றும் இவரின் ரசிகர்கள் இது போன்ற கதாபாத்திரங்களையே விரும்புகின்றனர்.

இதனை அடுத்து தெலுங்கில் 'எக்கடிக்கி போவது சின்னவாடா' என்ற படத்தில் துணை நடிகையாக நடித்தார். இந்த படத்தில் இவர் நடிப்பு மிகவும் பேசப்பட்டது, இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது.
அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்தார் நந்திதா. தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தாலும் இவருக்கு சினிமாவில் நிரந்தரமான இடம் இன்னமும் கிடைக்கவில்லை. சமீபத்தில் ஒரு போட்டோஷுட் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார் நந்திதா ஸ்வேதா. அப்புகைப்படம் தற்போது ஆன்லைனில் டிரென்டாகி வருகிறது.

எது எப்படியோ குமுதா மீண்டும் தமிழ் சினிமாவில் இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா போல ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதே அவர் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இது போன்ற புகைபடங்களை பார்த்து ஒரு இயக்குனர் வாய்ப்பு வழங்கி நந்திதா நடித்தால், குமுதா மட்டும் அல்ல அவரது ரசிகர்களும் ஹாப்பி தான்.


Click it and Unblock the Notifications











