நந்திதா ஸ்வேதாவின் அப்பா திடீர் மரணம்...பிரபலங்கள் இரங்கல்

சென்னை : பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Actress Nanditha Swethas father passes away

எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார் நந்திதா.சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவான நந்திதா, தொடர்ந்து விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் நேற்று கருத்து பதிவிட்ட அவர், எனது அப்பா சிவசாமி 54 இன்று காலமானார் என்பதை எனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்து விட்டு நந்திதாவின் நெருங்கிய தோழியான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சாரி நந்திதா. அவரின் ஆசிர்வாதம் எப்போதும் உன்னுடன் இருக்கும் என இரங்கல் தெரிவித்துள்ளார். திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களின் அதிர்ச்சி கலந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சொந்த ஊராகக் கொண்டவர் நந்திதா ஸ்வேதா. இவரது தந்தை பிசினஸ்மேன். நந்திதாவிற்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். விஜே.,வாக வாழ்க்கையை துவங்கிய ஸ்வேதா, தான் முதன் முதலில் நடித்த கன்னட படத்தில் நந்திதா என்ற கேரக்டரில் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தான் நடித்த கேரக்டரின் பெயரை தனது பெயருடன் இணைத்துக் கொண்டார்.

சசிக்குமார் நடித்த எம்ஜிஆர் மகன் படத்தில் கடைசியாக நடித்து முடித்துள்ள ஸ்வேதா, சன் டிவி சீரியலான அபியம் நானும் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். சில படங்களில் டப்பிங் கலைஞராகவும் இருந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X