நந்திதாவின் ஐபிசி 376 படம்... அக்டோபர் 28ல் ரிலீஸ்!

சென்னை : நடிகை நந்திதா ஸ்வேதா தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது நடிப்பில் ஐபிசி 376 படம் உருவாகியுள்ளது. பாலியல் வன்முறைக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகை நந்திதா ஸ்வேதா

நடிகை நந்திதா ஸ்வேதா

நடிகை நந்திதா ஸ்வேதா அட்டக்கத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு என சில படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தார்.

ஐபிசி 376 படம்

ஐபிசி 376 படம்


ஆயினும் இவருக்கு தமிழில் அதிகமான பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் ஐபிசி 376 என்ற படத்தில் இவர் தற்போது நடித்து முடித்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ராம்குமார் சுப்பாராமன் இயக்கம்

ராம்குமார் சுப்பாராமன் இயக்கம்

படத்தை பிரபு சாலமன், பாலசேகரன் ஆகியோயரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ராம்குமார் சுப்பாராமன் இயக்கியுள்ளார். படத்தில் நந்திதா இரண்டு லுக்கில் நடித்துள்ளார். அதில் போலீஸ் அதிகாரி வேடம் ஒன்று. ஆக்ஷன் த்ரில்லர் படமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

காவல் அதிகாரியாக நந்திதா

காவல் அதிகாரியாக நந்திதா

படத்தில் ராம்குமார் சுப்பாராமனும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மகாநதி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பவர்கிங் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ் பிரபாகர் படத்தை தயாரித்துள்ளார். பாலியல் வன்முறைக்கு உட்பட்ட பெண்ணின் வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரியாக நந்திதா படத்தில் நடித்துள்ளார்.

அக்டோபர் 28ம் தேதி ரிலீஸ்

அக்டோபர் 28ம் தேதி ரிலீஸ்

இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வரும் 28ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படம் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான படம்தான் என்று படத்தின் இயக்குநர் ராம்குமார் சுப்பாராமன் உறுதிப்படுத்தியுள்ளார்.

த்ரில்லர் சஸ்பென்ஸ் படம்

த்ரில்லர் சஸ்பென்ஸ் படம்

பெண்களை இழிவுப்படுத்தி வரும் படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் பெண்களின் பெருமை பேசும் படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். த்ரில்லர் சஸ்பென்ஸ் என்பதை தாண்டி படத்தில் யூகிக்க முடியாத மற்றொரு விஷயமும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X