போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கிய புது வீடு... புதிய வீட்டில் அடுத்த ஆண்டு கல்யாணம்?
சென்னை : நடிகை நயன்தாரா சிறப்பான பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அவர் போயஸ் கார்டனில் வீடு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த வீட்டில் அடுத்த ஆண்டில் அவர் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா தென்னிந்திய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றி நாயகியாக வலம் வருகிறார். ஹீரோக்களுடன் டூயட் பாடுவதாக இருக்கட்டும், அழுத்தமான கதாபாத்திரங்களாக இருக்கட்டும் நயன்தாராவுக்கு சிறப்பான இடம் காணப்படுகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அண்ணாத்த படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது.

ரஜினி ஜோடி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. இந்த கதாபாத்திரம் சிறிதாக இருந்தாலும்கூட ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

அடுத்த படம்
இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இந்த மாதத்தில் ரிலீசாக உள்ளது. படத்தில் கண்மணி என்ற கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் படத்தில் அவர் மிகவும் அழகாக காணப்படுகிறார்.
முக்கோண
காதல் கதையாக படம் உருவாகியுள்ளது.

விரைவில் திருமணம்
இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இணைந்துள்ள நிலையில் விரைவாக இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை போயஸ் கார்டனில் நயன்தாரா புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வீடு 18 கோடி ரூபாயில் வாங்கப்பட்டுள்ளதாகவும் சூப்பர்ஸ்டார் வீட்டிற்கு அருகில் வாங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

புதிய வீட்டில் திருமணம்
விரைவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படும் நிலையில் அடுத்த ஆண்டில் இவர்களது திருமணம் இந்த புதிய வீட்டில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











