முன்னாள் ஹீரோயின் வெளியிட்ட ஓணம் ஸ்டில்ஸ்.. அப்படியே இருக்கீங்களே.. ஆச்சரியப்படும் ரசிகர்கள்!
சென்னை: ஓணம் பண்டிகையை ஒட்டி பிரபல முன்னாள் ஹீரோயின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video
மலையாள மக்களின் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று, ஓணம். இதை அவர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.
இந்தப் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிறப்பு பூஜைகள்
கேரளாவில் கடந்த ஆண்டு மழைவெள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். இப்போது கொரோனா காரணமாக ஓணம் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது. இருந்தாலும் சில கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஓணம் பண்டிகையை ஒட்டி, மலையாள நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் ஓணம் தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

நவ்யா நாயர்
நடிகை நவ்யா நாயரும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவர் தமிழில், அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சேரனின் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சில நேரங்களில், ஆடும் கூத்து உட்பட பல படங்களில் நடித்தவர். சிறந்த நடனக் கலைஞரான அவர், மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

மீண்டும் நடிப்பு
கடந்த 2010 ம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆன நவ்யா, பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. குடும்ப வாழ்க்கைக்காக சினிமாவில் இருந்து விடைபெற்றார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் 8 வருடத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த நவ்யா,
ஒருத்தீ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அனுபவியுங்கள்
இந்நிலையில் ஓணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நவ்யா நாயர், பாதுகாப்பான மற்றும் சிறந்த வருடமாக அமையட்டும். எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்தீர்கள் என்பதுதான் முக்கியம். அதனால் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள் என்று கூறியுள்ளார். கூடவே அவர் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

ஜூஹி சாவ்லா
ஒருவர், நான்காவது போட்டோவுல நீங்க ஜூஹி சாவ்லா சாயல்ல இருக்கீங்க என்று தெரிவித்துள்ளார். வயசான மாதிரியே தெரியலை, அப்படியே பிரெஷ்சா இருக்கீங்க என்று சிலர் கூறியுள்ளனர். முந்தைய பதிவில், அவர் வீட்டில் போட்டுள்ள கோலங்களின் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். இதுவும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











