Nayanthara: கோயிலுக்குள் செருப்பணிந்து சென்ற நயன்தாரா.. மீண்டும் சர்ச்சை!

சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் மட்டுமில்லாமல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டெஸ்ட் படத்தின் சூட்டிங்கை நேற்றைய தினம் நயன்தாரா நிறைவு செய்திருந்தார். காஞ்சிபுரத்தில் ஜுரகரேஸ்வரர் கோயிலில் இவரது சூட்டிங் நிறைவடைந்துள்ளது. பிரபல தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் குமுதா என்ற கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் கோயிலில் நயன்தாராவை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து நயன்தாரா போலீஸ் பாதுகாப்புடன் கேரவனுக்க அழைத்து செல்லப்பட்டார். இதனால் அந்த இடத்தில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த சர்ச்சைகளில் நயன்தாரா சிக்கி வருகிறார். சமீபத்தில் அவரது அன்னபூரணி படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக மும்பை போலீசார் அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக கலைஞர் 100 நிகழ்ச்சியில் பங்கேற்ற நயன்தாரா, பேட்டரி காரில் ஏறிய நிலையில், தன்னுடைய பௌன்சர்களை ஏற்றாதது குறித்து கோபத்துடன் பேசியதும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

Actress Nayanthara again using slippers inside the temple for shooting


நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா நடித்திருந்த ஜவான் படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியான நிலையில், இந்தப் படம்மூலம் பாலிவுட்டிலும் நயன்தாரா என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ள நிலையில், இந்தியில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தமிழில் நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி என்ற படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

பாலிவுட்டில் என்ட்ரி: சமீபத்தில் வெளியான ஜவான் படத்தை தவிர்த்து நயன்தாராவிற்கு படங்கள் எதுவும் சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இதையடுத்து படங்களின் பிரமோஷன்களில் பங்கேற்பதில்லை என்ற தன்னுடைய கொள்கையில் இருந்து பின்வாங்கியுள்ளார் நயன்தாரா. சமீபத்தில் வெளியான அன்னபூரணி படத்தின் பிரமோஷன்களில் ஜெய்யுடன் கலந்துக் கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் பேட்டிகளையும் கொடுத்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த சர்ச்சைகளிலும் நயன்தாரா சிக்கி வருகிறார். அன்னபூரணி படம் மக்களின் மதஉணர்வுகளை புண்படுத்தும்வகையில் உள்ளதாக நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கலைஞர் 100 நிகழ்ச்சியில் நயன்தாரா: இந்நிலையில் கலைஞர் 100 நிகழ்ச்சியில் பங்கேற்ற நயன்தாரா, பேட்டரி காரில் தன்னுடைய பௌன்சர்களை ஏற்றாதது குறித்து கோபப்பட்ட வீடியோ வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமில்லாமல் தற்போது மீண்டும் கோயிலுக்குள் செருப்பு அணிந்துக் கொண்டு நயன்தாரா சென்றுள்ள வீடியோ வெளியாகி ரசிகர்களை கடுப்பிற்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்தக் கோயிலில் உள்ளவர்கள் இதை எப்படி அனுமதித்தார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

கோயிலுக்குள் செருப்பணிந்து சென்ற நயன்தாரா: முன்னதாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நயன்தாரா, திருப்பதியில் செருப்புக்காலுடன் நடமாட தடை விதிக்கப்பட்ட இடத்தில் செருப்பு அணிந்துக் கொண்டு போட்டோஷுட் நடத்தியிருந்தது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் நயன்தாரா தரப்பு மன்னிப்பு கேட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கோயிலில் செருப்பு அணிந்துக் கொண்டு சென்றுள்ளார் நயன்தாரா. தற்போது இந்த விவகாரமும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்டு தமிழகத்தில் செட்டில் ஆகியுள்ள நயன்தாரா, தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X