Nayanthara: ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறிய நயன்தாரா.. கொள்கையை மாற்றிய லேடி சூப்பர்ஸ்டார்!
நடிகை நயன்தாரா, ஜெய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது அன்னபூரணி படம்.
நயன்தாராவின் 75வது படமான இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். படத்திற்கு அதிகப்படியான பிரமோஷன்கள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்பட்டது.

சமையல் தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற இலக்குடன் காணப்படும் அன்னபூரணி சந்திக்கும் சவால்களை இந்தப் படம் எடுத்துக் காட்டியது.
நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா, ஜெய், சச்சு, சத்யராஜ், ரேணுகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது அன்னபூரணி. சமையல் தொழிலில் சாதிக்க விரும்பும் பெண் பிராமண குடும்பத்தில் பிறந்ததால் அசைவத்தை சமைப்பதில் ஏற்படும் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்ற கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. நிலேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
குறைவான பிரமோஷன்கள்: படத்திற்கு முன்னதாக சரியான அளவில் பிரமோஷன்கள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் உள்ள நிலையில், படம் அதிகமான ரசிகர்களை சென்றடையவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் இந்தப் படம் சில கோடிகளை வசூலித்துள்ளது. படத்தில் அன்னபூரணியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் நயன்தாரா. ஜெய் ஃபர்ஹானாகவும் சத்யராஜ் செஃப் ஆனந்த் சுந்தர்ராஜனாகவும் நடித்துள்ளனர்.
கொள்கையை மாற்றிய நயன்தாரா: தன்னுடைய படங்களுக்கான பிரமோஷன்களில் எப்போதும் பங்கேற்காத கொள்கையை உடையவர் நயன்தாரா. ஷாருக்கானுடன் முதல் முறையாக இணைந்த ஜவான் படத்தின் பிரமோஷன்களிலும் இவர் ஈடுபடவில்லை. இந்நிலையில் தற்போது அன்னபூரணி படத்திற்காக தன்னுடைய ரசிகர்களை சந்தித்துள்ளார். இந்த பிரமோஷனில் நடிகர் ஜெய்யும் பங்கேற்றுள்ளார். தன்னுடைய ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறினார் நயன்தாரா. ஜெய்யும் ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறினார்.
ரசிகர்கள் உற்சாகம்: இந்த சந்திப்பின்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் நயன்தாராவுடன் பேசியதை பார்க்க முடிந்தது. அவரை கட்டித்தழுவி அவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர். மேலும் அவர் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கெல்லாம் நயன்தாரா மிகவும் உற்சாகமாக ரியாக்ட் செய்ததையும் இந்த நிகழ்வில் பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியை ஆங்கர் அர்ச்சனா வழிநடத்தினார். சிறிது நேரம் கழித்து ஜெய், இந்த நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்தார்.
பிரியாணி பகிர்ந்த நயன்தாரா -ஜெய்: அவரும் ரசிகர்களுக்கு பிரியாணி பகிர்ந்த நிலையில், ஒரு ரசிகை அவருக்கு முத்தம் கொடுத்ததையும் பார்க்க முடிந்தது. தொடர்ந்து இங்கு என்ன நடக்கிறது என்று அர்ச்சனா கேட்க, அதை அந்த ரசிகையிடம்தான் கேட்க வேண்டும் என்று ஜெய் வெட்கத்துடன் கூறினார். இதையடுத்து Biriyani is an Emotion என்று அர்ச்சனாவுடன் ரசிகர்கள் கூறினர். தொடர்ந்து அன்னபூரணிக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications











