அடேங்கப்பா.. தனுஷை தொடர்ந்து.. போயஸ் கார்டனில் 2 வீடுகளை வாங்கிய பிரபல நடிகை.. அதுவும் 4BHKவாம்!

சென்னை: நடிகர் தனுஷை தொடர்ந்து பிரபல நடிகையும் போயஸ் கார்டனில் வீடு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ள நயன்தாரா, ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

அதிக சம்பளம் வாங்கும் நடிகை

அதிக சம்பளம் வாங்கும் நடிகை

இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. மேலும் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமைக்கும் உரியவர் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.

நயன்தாரா குறித்த ஹாட் தகவல்

நயன்தாரா குறித்த ஹாட் தகவல்

மேலும் ஜிஎஸ் விக்னேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நயன்தாரா, தெலுங்கில் காட் ஃபாதர் என்ற படத்திலும், மலையாளத்தில் கோல்டு என்ற படத்திலும் கனெக்ட் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா குறித்த ஹாட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

போயஸ் கார்டனில் புதிய வீடு

போயஸ் கார்டனில் புதிய வீடு

அதாவது நடிகை நயன்தாரா விவிஐபி ஏரியாவான சென்னை போயஸ் கார்டனில் வீடு வாங்கியுள்ளார். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தின் வீடு போயஸ் கார்டனில்தான் உள்ளது. அவரை தொடர்ந்து அவரது மருமகனும் நடிகருமான நடிகர் தனுஷும் போயஸ் கார்டனில் இடம் வாங்கி பிரம்மாண்டமாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்.

4 பெட் ரூம் உள்ள 2 வீடுகள்

4 பெட் ரூம் உள்ள 2 வீடுகள்

இந்நிலையில் நடிகை நயன்தாராவும் போயஸ் கார்டனில் வீடு வாங்கியுள்ளாராம். போயஸ் கார்டனில் உள்ள புகழ் பெற்ற அப்பார்ட்மெண்டில் நான்கு பெட்ரூம்களை கொண்ட இரண்டு வீடுகளை வாங்கியுள்ளாராம் நடிகை நயன்தாரா. பல கோடிகள் மதிப்புள்ள இந்த வீட்டிற்கு விரைவில் ஒரு நல்ல நாளில் குடி பெயர போகிறாராம் நயன்தாரா.

நிச்சயம் முடிந்தது

நிச்சயம் முடிந்தது

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் லிவிங் டுகெரில் உள்ளனர். நடிகை நயன்தாரா தனது கைவசம் உள்ள படங்களை முடித்து விட்டு தனது காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Vignesh Surprise-ல் கண்கலங்கிய Nayan | Samantha, Kala Master, Connect #HBDNayan
களைக்கட்டும் ஹேப்பி ஈவன்ட்ஸ்

களைக்கட்டும் ஹேப்பி ஈவன்ட்ஸ்

புதிய வீட்டிற்கும் சென்றதும் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண வேலைகள் தொடங்கும் என்று தெரிகிறது. நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு தளத்தில் அவரது காதலரான விக்னேஷ் சிவன் கலக்கல் சர்ப்ரைஸ் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X