Nayanthara: குடும்பமா ஆயுதபூஜை கொண்டாடிய நயன்.. வீடியோ படையப்பா படம் மாதிரி இருக்கேப்பா!
சென்னை: நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி தமிழ் சினிமாவில் மிகவும் க்யூட்டான தம்பதியாக உள்ளனர். இவர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளார்களோ அதே அளவுக்கு இவர்களின் குழந்தைகள் குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்களுக்கு எப்போதும் ஆர்வம் குறைந்தது இல்லை.
நயன் - விக்கி புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்குகளின் மற்றும் கமெண்டுகளை விட அவர்களின் குழந்தைகள் இருக்கும் புகைப்படத்திற்கு லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் என்றைக்கும் அதிகம்தான். இந்நிலையில் தனது குழந்தைகளுடன் நயன் - விக்கி ஆயூத பூஜை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை நயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா: ஐயா படத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய நயன். சினிமா வாழ்க்கையிலும் தனது சொந்த வாழ்க்கையிலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து தற்போது, லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 2022ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வாடகைத் தாய் மூலம், இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என பெயரிட்டனர். தங்களது வேலை நேரம் போக இருவரும் தங்களின் குழந்தைகளுடன் நேரம் செலவழித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
நயன் - விக்கி: நயன்தாரா நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்திற்கான ப்ரீ புரெடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. அதேபோல், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படம் உருவாகி வருகின்றது. இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வருகின்றார். முதலில் இந்தப் படத்திற்கு எல்ஐ சி என பெயரிடப்பட்டது. ஆனால் எல்.ஐ.சி நிறுவனம் இந்த பெயருக்கு மறுப்பு தெரிவிக்கவே, நீதிமன்றம் வரை சென்று, இறுதியாக எல்.ஐ.கே என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதுமட்டும் இல்லாமல் விக்கி மற்றும் நயன் இணைந்து ரவுடி புரெடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி படங்களைத் தயாரித்தும் வருகின்றனர்.
உயிர் - உலக்: அண்மையில் தஙகளின் குழந்தைகளின் இரண்டாவது பிறந்தநாளை இருவரும் துபாயில் கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கியது மட்டுமில்லாமல், கமெண்ட்டுகளில் குழந்தைகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நயன்தாரா தனது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அதிக படங்களில் கமிட்டாகாமல் இருக்கின்றார். மேலும் தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் சென்னையில் மட்டும் படபிடிப்பு நடத்துவதாக இருந்தால் ஓகே சொல்லுகின்றேன் என கண்டிஷன் போடுவதாக கூறப்படுகின்றது.
ஆயுத பூஜை: விக்கி - நயன் என இருவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். அண்மையில் விநாகர் சதுர்த்திக்கு வீட்டில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்நிலையில், இன்று அதாவது அக்டோபர் 12ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடினர். வழக்கமாக ஆயுத பூஜை வழிபாடு என்பது, விஜயதசமி தினத்திலும் மக்கள் வழிபடுவதுண்டு. அந்த வகையில், நயன் - விக்கி தம்பதியர் தங்களின் குடும்பத்தினருடன் இன்று வழிபட்டுள்ளனர். இதுமட்டும் இல்லாமல் தங்கள் வீட்டில் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு பூஜை முடிந்து பிரசாதமும் வழங்கியுள்ளனர். பிரசாதத்தை தங்களின் குழந்தைகளைக் கொண்டு ஊழியர்களுக்கு வழங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











